12 January 2019

திருப்பாவை – பாசுரம் 28

கறவைகள் 

"சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக!"




கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்,

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.


நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு

பசுக்களை மேய்த்து, காடு சென்று, 
அங்கு ஒன்று கூடி உண்போம்.

அறிவொன்றும் இல்லாத, மாடுமேய்க்கும் குலத்தில் 

பிறந்த நாங்கள், உன்னை எங்களுடன் 
குலத்தவனாக பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம்.

எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா! 

நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது!

அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள்,

 அன்பால் அழைத்தைப் பொறுத்துக் கோபம் கொள்ளாமல் 

எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும்! .







படங்களை பகிர்ந்த பக்தர்களுக்கு நன்றிகள் பல


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. ஆண்டாள் அழகாக இருக்கிறாரே!! சடை எல்லாம் போட்டு!! அழகு அலங்காரம்!

    கறவைகள் இன்று தயிர்சாதமும் செஞ்சு உள்ள போயாச்சு!

    ஆண்டாளுக்கு இனி ரெஸ்ட்..... நாள் அருகில் வந்தாயிற்று...

    கீதா

    ReplyDelete
  2. இனிய பாசுரம்....

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  3. அருமையான படங்கள்.
    தாழ்ம்பூ அலங்காரம் படம் அருமை.
    பாசுரம், விளக்கம் அருமை.

    ReplyDelete
  4. தாழம்பூ ஜடை சூப்பர். நான் சின்ன வயசில பின்னி வச்சிருக்கேன்/

    ReplyDelete