03 January 2019

திருப்பாவை – பாசுரம் 19

குத்து விளக்கெரிய

"நப்பின்னையே! க்ஷணகாலமும் நீ கிருஷ்ணனை பிரிய மாட்டாயோ? இது தகுமோ?"




குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

         நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு

"நிலை விளக்குகள் ஒளிவீச,

 யானைத் தந்தங்களினால் செய்த 
கால்களையுடைய கட்டிலிலே அழகு, 
குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும் 

ஐந்து குணங்களையுடைய துமான மெத்தென்ற 

பஞ்சு படுக்கை மீது கொத்துக் கொத்தாக அலர்கின்ற 

பூக்களை யணிந்த கூந்தலை யுடையவளான

 நப்பின்னையின் மேல் தலையை வைத்து பள்ளி கொள்கின்ற அகன்ற திருமார்பையுடைய பிரானே! 

வாய்திறந்து பேசு!

மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணையுடைய நப்பின்னாய்!

 நீ உன் மணாளன் கிருஷ்ணனை ஒரு நொடிப்பொழுதும் படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை. 

கணமாகிலும், நீ அவன் பிரிவை சகிக்க மாட்டாய்! ஆ! 

நீ இப்படி இருப்பது நியாமும் ஆகாது குணமும் ஆகாது." 












ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. பாசுரம் படித்து படங்களில் ஆண்டவனை தரிசனம் செய்தேன்.
    அழகிய படங்கள்.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. படங்கள் அட்டகாசம் அனு...

    நல்ல தரிசனம்...

    எல்லாவற்றையும் விட முகப்புப் படம் ரொம்பவே அட்டகாசம்...ரொம்ப அழகா இருக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கா அந்த படம் கப்பன் பார்க் ல் எடுத்தது ...

      Delete