09 January 2023

25. திருப்பாவை - ஒருத்தி மகனாய்

  இருபத்தஞ்சாம் பாசுரம் - எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.







ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்

     ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த

     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

     அருத்தித்து வந்தோம், பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

     வருத்தமும்  தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்


தேவகிப்பிராட்டியாகிற ஒப்பற்ற ஒருத்திக்கு மகனாய் அவதரித்து, 

அவதரித்த அந்த ஒப்பற்ற இரவிலேயே யசோதைப்பிராட்டியாகிற ஒப்பற்ற ஒருத்திக்கு 

மகனாகி ஒளித்து வளர்ந்த காலத்தில், 

அதைப் பொறுக்கமாட்டாதவனான கம்ஸன் தானே உன்னை அழிக்க வேண்டும்

 என்னும் தீமையை நினைக்க அவனுடைய எண்ணத்தை அவனோடே போகும்படி செய்து, 

அவனுடைய வயிற்றில் தீயாக நின்ற ஸர்வேச்வரனே! 

உன்னிடத்தில் எங்களுக்கு வேண்டியதை ப்ரார்த்தித்து இங்கே வந்தோம். 

எங்களுடைய ப்ரார்த்தனையை நீ நிறைவேற்றினாயாகில் பிராட்டியும் விரும்பும் உன் செல்வத்தையும் வீரத்தையும் நாங்கள் பாடி, உன்னைப் பிரிந்திருக்கும் இந்த துக்கமும் நீங்கி மகிழ்ச்சியடைவோம்.


மார்கழி மாதம்   இருபத்தி ஐந்தாம்  நாள் - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ,

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உற்சவர், ஒளித்து வளர்ந்த ஒருவன் சிறப்பு அலங்காரத்தில் .... 












ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கழி மாதம் பகல் பத்து 10-வது திருநாள்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺


No comments:

Post a Comment