வாழ்க வளமுடன்
போன பதிவில் ரங்கஸ்தலம் கண்டோம்....
இங்கு மிக பெரிய கோபுர வாசல் கடந்து சென்றால் கொடிமரம். தங்க வண்ணத்தில் ஜொலிக்கிறது. அடுத்த மண்டபத்தில் மேற்புறம் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன .
கருடாழ்வாருக்கு சிறிய சன்னதி.அங்கு பக்தியோடு விளையாடும் குரங்கார். இந்த மண்டபம் முழுவதும் பல வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள். புனரமைப்பு பணிகள் எல்லாம் செய்து கோவில் உட்புறம் பளிச்சென்று அழகாக உள்ளது.
இங்கு மூலவர் 4.5 அடி நீளமுள்ள ஸ்ரீ ரங்கநாதர். ஒரே சாலிகிராமக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளார். ஆதிசேஷனின் மீது விஷ்ணு பெருமான் பள்ளிகொண்டுள்ளார் . நீலாதேவி மற்றும் பூதேவியின் சமேத ஸ்ரீ ரெங்கநாத சுவாமி.
ஸ்ரீரங்கப்பட்டினத்திலும், ஸ்ரீரங்கத்திலும் மூர்த்திகள் நிறுவப்பட்ட அதே தருணத்தில் இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு மூங்கில் கூடை வடிவ கருவறை ஆகும்.
இராவணனை வென்ற பிறகு, அயோத்திக்குத் திரும்பினார் ஸ்ரீ ராமர். அயோத்தியில் மன்னராக ராமர் பட்டாபிஷேக (முடிசூட்டு) ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அந்நிகழ்வில் விபீஷணனும் கலந்து கொண்டார். பின் விபீஷணருக்கு பரிசாக, ஸ்ரீ ரங்கநாதரின் விக்ரஹத்தை ஸ்ரீ ராமர் கொடுத்தார். அதனை இலங்கைக்கு எடுத்துச் செல்ல ஒரு மூங்கில் கூடையும் ஸ்ரீ ராமர் கொடுத்தாராம். இங்கிருந்த சப்தரிஷிகள் விபீஷணரிடம் ரங்கஸ்தலாவில்லே நீலாதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய ரங்கநாதரின் சிலையை நிறுவுமாறு வேண்டினார்கள். அதுவே இங்கு சப்தரிஷிகள் மூலம் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அதாலே கருவறை மூங்கில் கூடையை சித்தரிக்கும் வடிவத்தில் உள்ளது.
இணையத்திலிருந்து |
மூலஸ்தானத்தை சுற்றி வரும் பாதையில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் , ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் நம்மாழ்வாரின் விக்ரஹங்கள் உள்ளன.
இங்கு மூலஸ்தானத்தை சுற்றி வர சில படிகள் இறங்கி சுற்றி வர வேண்டும்.
சுற்றும் போது சூரிய ஒளி படும் வகையில் ஒரு சிறிய ஜன்னல் உள்ளது. மகர சங்கராந்தி தினத்தன்று (ஜனவரி 14/15) சூரியக் கதிர்கள் நேரடியாக ஸ்ரீ ரங்கநாதரின் பாதத்தில் விழுகின்றன என கூறினர். இந்த சுற்றுப்பாதை சிறு குகைக்குள் செல்லுவது போல இருந்தது. மிக அருமையான அமைப்பு.
கோவிலின் இடதுபுறத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு தனி சன்னதி உள்ளது.
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம் 💕💕
சிறப்பான விவரங்கள்..
ReplyDeleteபதிவு நன்று..