09 February 2023

ரங்க ஸ்தலத்தில் சிற்ப வேலைப்பாடுகள்...

வாழ்க வளமுடன்...


முந்தைய பதிவுகள் -

இன்றைய பதிவில் ரங்க ஸ்தலதில் உள்ள அற்புத சிற்ப வேலைப்பாடுகளை  காணலாம்...



 கோவிலைச் சுற்றியுள்ள ஒவ்வொரு தூணிலும் மிக நேர்த்தியான மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. அனைத்தும் அதி அற்புதம்.  ஒவ்வொரு சிலையிலும் அவற்றின்  கால் பகுதிகளை காணும் போது சிலவற்றில் நேராகவும், சிலவற்றில் 3 d  போன்ற அமைப்பிலும் இருந்தன. இங்கு பிரஹாரம் மற்றும் வெளி  கோபுரம்  விஜயநகர மன்னர்களால்  கட்டப்பட்டது.



கோவிலை சுற்றிவரும் பாதையில் பல கல்யாண photo shoot நடைகின்றன. நிறைய ஜோடிகள்  அங்கு படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். 



















இங்கு சங்கா மற்றும் சக்ர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இரண்டு குளங்கள் உள்ளன. வெளியே சிறிது தூரம் நடந்து சென்றால் அவற்றை பார்க்கலாம். ஆனால்  எங்களுக்கு அது பற்றி  தெரியவில்லை, அதனால் அங்கு செல்லவில்லை.










கோவிலின் வெளியே புதையுண்ட நிலையில் உள்ள தேர் சக்கரம் ...







இங்கு செல்லும் போது  மதிய உணவையும் எடுத்து சென்றிந்தோம். நல்லவேலை  அருகில் ஏதும் கடைகள் கூட இல்ல. எடுத்து சென்ற எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் அமிர்தமாக  இருந்தது. இங்கு ஒரு மணிநேரம் இருந்தாலே பொறுமையாக அனைத்தையும் காணலாம். 



இங்கிருந்து அடுத்து சென்ற கோவில் பற்றி அடுத்த பதிவில் தொடரும்....

அன்புடன் 

அனுபிரேம் 💕💕





No comments:

Post a Comment