வாழ்க வளமுடன்
![]() |
முருக பெருமான் |
![]() |
கருட வாகனத்தில் பெருமான் |
![]() |
வெளியே அமைந்து இருந்த தேர் சக்கரங்கள்.. |
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).
இது ஒரு நாள் பயணம் தான், ஆனால் பல பதிவுகளாக கொடுக்கும் அளவு இருந்த சிறப்பான பயணம். அங்கு நாங்கள் பார்த்த, ரசித்த விடங்களும் மற்றும் பல தகவல்களையும் இங்கு தொடர்ந்து வாசித்த அனைவருக்கும் நன்றிகள் பல.
அன்புடன்
அனுபிரேம் 💕💕
சிற்பங்கள் அனைத்தும் அழகு.
ReplyDeleteஅருமை அருமை, அனு!!! அழகு. நந்தி ஹில்ஸ் போக வேண்டும் இத்தனைக்கும் அருகில்தான் ஒரே நாள் ட்ரிப் ஆனால் இன்னும் செல்லவில்லை.
ReplyDeleteதூண்களின் வழி நடை மேடை? அப்படம் சூப்பர். சிற்பங்களும் அழகு.
கோயிலுக்குள் குளம் கூட உண்டு இல்லையா? சுற்றி மண்டபம் தூண்கள்?
ரசித்துப் பார்த்தேன் அனு, காணொளியும் படங்களும்.
நெல்லை கூட ஞாயிறு அன்று எபி யில் கோயில் சிற்பங்கள் படங்கள் நிறைய பகிர்கிறார் அத்தனை அழகு எல்லாமுமே...
கீதா