17 February 2023

போக நந்தீசுவரர் கோவில் (Bhoga Nandeeshwara Temple)

வாழ்க வளமுடன்...




முந்தைய பதிவுகள் -


இங்கிருந்து அடுத்து நாங்கள் சென்ற இடம்  நந்தி மலையின் அடிவாரத்தில் உள்ள போக நந்தீசுவரர் கோவிலுக்கு. ரங்கஸ்தலாவிலிருந்து  12 km தொலைவில்  உள்ள கோவில்.

 


கோவில் செல்லும் வழி 

கொடி மரம் 

சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில், நந்தி மலைக்கு அருகேயுள்ள நந்தி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு போக நந்தீசுவரர் திருக்கோயில் அமைதியும், அற்புத  கலை  செல்வங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள கோவில். அதி அற்புதமான இடம். 

சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்றும்  கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போக நந்தீசுவர கோவிலொன்றும் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.


இறைவன்:  

1.  ஸ்ரீ உமா மஹேஸ்வரர், 

2.  ஸ்ரீ  போக நந்தீஸ்வரர், 

3.  ஸ்ரீ  அருணாசலேஸ்வரர் 

4.  ஸ்ரீ  யோக நந்தீஸ்வரர் (மலைமீது)


இறைவி -   ஸ்ரீ  கிரிஜாம்பா, ஸ்ரீ  அபிதகுஜலாம்பாள்





நந்தி வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறுமலை அடிவாரத்தில் பாணர் வம்சத்தை சேர்ந்த பட்டத்து ராணி ரத்னாவளியால் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். அதன் பின்னர் அப்பகுதியை  ஆண்ட கங்கர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர் மன்னர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.








திராவிட கட்டடக்கலையில் அமைந்துள்ள கோயிலில். மூன்று கருவறைகள் உள்ளன.
 மத்தியில்  கல்யாண கோலத்துடன் உமா மகேஸ்வரரும், வலதுபுறத்தில் லிங்க ரூபத்தில் போக நந்தீஸ்வரரும், இடதுபுறம்  அருணாசலேஸ்வரரும் தரிசனம் தருகிறார்கள்.

தெற்குப் பகுதியில்  உள்ள  அருணாச்சலேஸ்வரர் சன்னதியை கட்டியவர்கள் கங்கர்கள்.
வடக்குப் பகுதியில் உள்ள போக நந்தீசுவரர் சன்னதியை  கட்டியவர்  சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திரர் ஆவார்.

இந்த இரண்டு கோவில்களுக்கு இடையே சிறிய அளவில், அருள்மிகு உமாமகேஸ்வரர் கோயில் உள்ளது. இதற்கு முன் அற்புத கலைநயம் கொண்ட தூண்கள் பொருத்தப்பட்ட வசந்த மண்டபம் உள்ளது. கரும் பளிங்குக் கற்களால் ஆன தூண்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடு மிக அற்புதமானவை.  அந்த சிற்பங்களும் கலை  நயனங்களும் பேலூர் ஹலபேடு கோயில்களை ஒத்து  இருந்தது.


இணையத்திலிருந்து 


இணையத்திலிருந்து 


இணையத்திலிருந்து 


நாங்கள் சென்ற நேரம் முன் மாலை  நேரம் கூட்டமும் இல்லை . நல்ல தரிசனம். ஆனாலும்  அந்த நேரம் வசந்த மண்டபத்தில் படம் எடுக்க இயலவில்லை. அதனாலே  அப்படங்களை  இணையத்திலிருந்து பகிர்ந்தேன்.

மூன்று  சன்னதியும் பொறுமையாக தரிசனம் செய்தவுடன், வெளியே மிக குளிர்ச்சியான முன் மண்டபம். ஒவ்வொரு தூணிலும் பல வகை சிற்பங்கள்.

இக்கோவிலின் மற்றுமொறு  சிறப்பு .... கல் குடை ... அத்துணை அழகு .








அடுத்து பொறுமையாக பிரகாரத்தில் நடக்க இன்னும் இன்னும் பல சிறப்பான  காட்சிகள் ...









போக நந்தீஸ்வரர் கோயிலில்  அருணாசலேஸ்வரர் பரமனின் பால்ய பருவத்தையும், போக நந்தீஸ்வரர் அவரின் இளமைப் பருவத்தையும், மலை மீதுள்ள யோக நந்தீஸ்வரர் அவரின் துறவு நிலையையும் குறிப்பிடுவதாக ஐதிகம்.






மூலஸ்தானத்தின்  நேர் பின்புறம் உள்ள  ஜன்னல் போன்ற அமைப்பில்  உள்ள சிற்பம் .









இங்கு என்னை  வியக்க வைத்த சில சிற்பங்கள் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.







முதல் திருமுறை

010 திருவண்ணாமலை

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
 



உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.



தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 💕💕



9 comments:

  1. இவ்வளவு தூரம் சென்று நிறைய சிற்பங்களை ஏன் படமெடுக்கவில்லை? வாய்ப்பு மீண்டும் வருமா?

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல இங்கும் நிறைய படங்களும் , காணொளிகளும் எடுத்தேன் சார் . அந்த வசந்த மண்டபத்தில் மட்டும் படம் எடுக்கவில்லை. அந்த படத்தை மட்டும் இணையத்திலிருந்து பகிர்ந்தேன். மற்றவை அனைத்தும் எனது மொபைலில் எடுத்தவையே

      Delete
  2. காணொளிகளும் படங்களும் அருமை அனு....ஏன் இணையத்திலிருந்து? அந்தப் படங்கள் எடுக்க அனுமதி இல்லையோ?

    நான் போக வேண்டும் என்று நினைத்திருக்கும் இடம் ஆனால் வாய்ப்பு எப்போது என்று தெரியவில்லை.

    இன்றைய சிவராத்திரிக்கு ஏற்ற பதிவு.

    அழகான கோயில் என்று தெரிகிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த வசந்த மண்டபத்தில் இப்படி ஒரு சிறப்பு இருப்பது எங்களுக்கு தெரியாது கீதா அக்கா. பொதுவாக நான் மூலஸ்தானம் அருகில் செல்லும் போது போனை பையில் வைத்துவிடுவேன். அங்கு ஏதும் படம் எடுக்க மாட்டேன். இந்த வசந்த மண்டபம் மூலஸ்தானத்தின் வெகு அருகில், அதனால் தரிசனம் செய்த உடன் அங்கு என்னால் படம் எடுக்க இயலவில்லை என்றே கூறினேன்.

      ஆனாலும் அந்த காட்சிகள் நீங்களும் காண வேண்டியே இணையத்திலிருந்து...


      சிவராத்திரி அன்று அங்கு ரத உற்சவம் உண்டாம்..

      Delete
  3. கல்குடை ஹையோ அசந்துவிட்டேன்..அசாத்தியமாக இருக்கிறது!!!!

    அடுத்த பதிவுலும் சிற்பங்கள் வரும் என்று பார்த்து மகிழ்ச்சி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இன்னும் பல சிறப்பான படங்கள் அடுத்த பதிவில் வரும் அக்கா

      Delete
  4. ஜன்னல் போன்ற இடத்தில் இருக்கும் சிற்பம் அருமை.

    காணொளிகளிலும் ...மற்றும் இணையத்திலிருந்து எடுத்தவை அந்தச் சிற்பங்கள் அட்டகாசம் பார்க்க பார்க்க என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை...

    கீதா

    ReplyDelete
  5. ஆமாம் பேலூர் ஹலபேடு போல இருக்கு .....நான் அங்கும் சென்றதில்லை மனதில் உண்டு. இணையத்தில் பார்த்திருக்கிறேன்..

    கீதா

    ReplyDelete