24 February 2023

போக நந்திகேஸ்வரர் கோவில் கோபுர அமைப்பு...

 வாழ்க வளமுடன் 





 




அங்கு என்னை மிகவும் வியப்பில்  ஆழ்த்தியவை அந்த கோபுரங்களில் இருந்த முகம் போன்ற அமைப்புகள். வரிசையாக கோபுரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் வித்தியாசமாக அந்த முகம் போன்ற அமைப்புகள் அமைந்து இருந்தது. உற்று நோக்கினால் மட்டுமே நமக்கு வித்தியாசம் தெரியும். நம் ஊர் கோவில்களில் காண்பதற்கும் இங்கும் நிறைய வேறுபாடுகள் மிக பொறுமையாக வியந்து இந்த அமைப்புகளை கண்டேன். மிக அற்புதமான படைப்புகள்.







இங்கு   போக நந்தீஸ்வரர்க்கும்,  அருணாசலேஸ்வரர்க்கும் தனி தனி விமானங்கள் உண்டு. இவ்விரு கோவில்களின்  இடையே  உள்ள   ஸ்ரீ உமா மஹேஸ்வரர் சன்னதியின் பின்புறம் இந்த ஜன்னல் போன்ற அமைப்பு உள்ளது.











ஒவ்வொரு இடத்திலும் அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். நாங்கள் சென்ற நேரம் யாருமே இல்லை, எனவே அனைத்தையும் ரசித்து காண முடிந்து.








முதல் திருமுறை

010 திருவண்ணாமலை

பாடல் எண் : 2

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற

ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்

பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 


கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.


தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 💕💕

No comments:

Post a Comment