20 December 2018

திருப்பாவை – பாசுரம் 5


'மாயனை மன்னு' ️
தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்:



மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.


நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு

மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த, திருக்குமாரனை தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை, இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து,

யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை பரிசுத்ததுடன் அணுகி,
மலர்களைத் தூவி வணங்கி வாயாரப் பாடி,
நெஞ்சார தியானிப்போம்!

முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும்.
 ஆகவே பகவான் நாமங்களைச் சொல்லி, பாடி போற்றுவோம்!








ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. காலை வணக்கம் 🙏.

    ஒவ்வொரு நாளும் ஒரு பாசுரம்... இனிமை.

    படங்கள் அழகு.

    ReplyDelete
  2. ஐந்தாம் பாசுரம் நன்று சகோ.

    ReplyDelete
  3. அழகிய பாசுரத்துடன் யாதவக் கிருஷ்ணன்.. கொடுத்து வைத்தவள் அல்லவா யசோதை!..

    ஆண்டாள் திருவடிகள் போற்றீ..

    ReplyDelete
  4. ஆண்டாள் தரிசனம் கிடைக்கப்பெற்றேன்ன்..

    ReplyDelete