24 December 2018

திருப்பாவை – பாசுரம் 9

தூமணி மாடத்து

"மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?"






தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு
       

தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய
வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே! கதவை திறந்துவிடு.

மாமி! உன் பெண்ணை எழுப்ப மாட்டீரோ?
அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ?
மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின்
நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது.
சீக்கிரம் உன் மகளை எழுப்புங்கள்!







ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. பாடலை பாடி படங்களை தரிசனம் செய்தேன்.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. ஆண்டாள் தரிசனம் நன்று.

    ReplyDelete
  3. கேசவ் ஓவியம், ஆண்டாளின் திருக்கோலப் படங்களுடன் பதிவு அருமை.

    ReplyDelete
  4. ஆண்டாள் அனுக்கிரகம் பெற்றேன்.

    ReplyDelete
  5. ஆண்டாளும் அவர் பாடலும் அத்தமிழும் என்னவென்று சொல்ல அனு?!

    கீதா

    ReplyDelete
  6. சென்ற பாசுரங்களும் பார்த்தாச்சு அனு..அங்கு கருத்துதான் போடலை...

    கீதா

    ReplyDelete