13 November 2018

முருகன் தரிசனம்

ஓம் சரவணபவ



சிக்கல் சிங்காரவேலர் 







சிக்கல் சிங்காரவேலர் 




சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார்.

அலைபாயும் திருச்செந்தூரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று “”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று கோஷமிடும் ஒலி விண்ணைப் பிளக்கும்.

அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை.

அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார்.

தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறினார் வீரபாகு.

சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மன் வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள், மற்றும் சுற்றம்  அனைத்தையும்  இழந்தான். இறுதியில், மாயப்போர் முறைகளை செய்யத் துவங்கினான்.

கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார்.

அம்மாமரம் இருகூறாகச் சிதைந்தது.

ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை உண்டு.


சிக்கல் சிங்காரவேலர் 


சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது.

உண்மையில்,சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும்.

அதனால் தான் “”வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்று போற்றி வழிபடுவர். 

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார்.






திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன்






நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் - முருகா (நீல)

நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா (நீல)

வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
வேழ முகம் படைத்தோன் சோதரனே
வேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே (நீல) 







பழனி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படைவீடு கொண்ட முருகா

பால் பழம் தேனோடு,
பஞ்சாமிர்தம் தந்து,
பக்தரைக் காக்கும் முருகா!

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! - சக்தி
வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்!
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!



வடம் இட்ட பசும் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு
இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை - எங்கள்
இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!

வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!





சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!

செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!



கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, 

நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம்.

குழந்தை கடவுள் முருகரை துதிப்போம்.

அருள் முகமாம் முருகனின் அருள் மழை
 அனைவருக்கும்  பரி பூரணமாக கிடைக்கட்டும்....

வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!


அன்புடன்,
அனுபிரேம்

3 comments:

  1. தரிசனம் சிறப்பு அனு...படங்கள் அழகு.

    // நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து,

    நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம்.//

    தாங்கி மகிழ்வோம்...நல்ல எண்ணங்களைக் குடி கொள்ள வைக்க முயற்சிப்போம்...

    கீதா

    ReplyDelete
  2. >>> நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம்.<<<

    முத்து முத்தான வார்த்தைகள்....

    வெற்றிவேல்... வீரவேல்!...

    ReplyDelete
  3. நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம்.//
    நன்றாக சொன்னீர்கள்.

    மிக அருமையான பதிவு அனு.
    படங்கள், பாடல்கள் அனைத்தும் மிக அருமை.
    //அருமறை பரவிய
    சரவண பவ குகனை
    சிந்தனை செய் மனமே!//

    எனக்கு பிடித்த் பாடல் பகிர்வுக்கு நன்றி.

    முருகன் அருள் காக்க வேண்டும் அனைவரையும்.

    ReplyDelete