இன்று 19.11.2018 கைசிக ஏகாதசி..
கைசிகப் புராணம், வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக உரைத்த பெருமை கொண்டது.
பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்று இவ்வாறு கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு, வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்..
எனவே இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று பெரும்பாலும் எல்லா வைணவத் தலங்களிலும் கைசிக புராணம் பராசர பட்டரின் வியாக்கியானத்துடன் வாசிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண்விழிக்கிறார்.
கைசிக மாஹாத்மியத்தில் *ஸ்ரீவராஹமூர்த்தி* பூமிப்பிராட்டியிடம்,நம்பாடுவான் என்பான் *திருக்குறுங்குடி* திவ்யதேசத்தில் *கைசிகம்* என்னும் பண்ணால் தன்னைப்பற்றிப் பாடி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மேல்வீடு எனப்படும் மோக்ஷத்தைத் தந்தருளினார்.
கைசிக ஏகாதசியன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் அரவணையான பிறகு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து ஆண்டுதோறும் வஸ்த்ரங்கள் சாற்றுவதில் ஏற்படும் குறைகளை நீக்க 365 தூய பட்டு வஸ்த்ரங்களைச் சாற்றிக் கொள்கிறார்.
இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோவிலிலும் ஆண்டாள் ரெங்கமன்னார்க்கு 108 போர்வை சார்த்தும் வைபவம் மிக சிறப்பாக நடைபெறும்.
திருக்குறுங்குடியில் நம்பாடுவான் வாழ்க்கையை நாடகமாக நடத்தி பக்தர்களைப் பரவசப்படுத்தும் நிகழ்ச்சி இன்றும் நடத்தப்படுகிறது.
போன வருட பதிவு ... கைசிக ஏகாதசி - நம்பாடுவான் சரித்திரம்
813.
கரண்ட மாடு பொய்கையுள்* கரும்பனைப் பெரும்பழம்,*
புரண்டு வீழ வாளைபாய்* குறுங்குடி நெடுந்தகாய்,*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்,*
இரண்டுகூறு செய்துகந்த* சிங்கம் என்பது உன்னையே (2)
அன்புடன்
அனுபிரேம்

திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவநம்பி |

அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.
ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது.

ஸ்ரீரெங்கம் |
ஸ்ரீரெங்கம் |
ஸ்ரீரெங்கம் |
ஸ்ரீரெங்கம் |
ஸ்ரீரெங்கம் |
ஸ்ரீரெங்கம் |
இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோவிலிலும் ஆண்டாள் ரெங்கமன்னார்க்கு 108 போர்வை சார்த்தும் வைபவம் மிக சிறப்பாக நடைபெறும்.
திருக்குறுங்குடியில் நம்பாடுவான் வாழ்க்கையை நாடகமாக நடத்தி பக்தர்களைப் பரவசப்படுத்தும் நிகழ்ச்சி இன்றும் நடத்தப்படுகிறது.
போன வருட பதிவு ... கைசிக ஏகாதசி - நம்பாடுவான் சரித்திரம்
813.
கரண்ட மாடு பொய்கையுள்* கரும்பனைப் பெரும்பழம்,*
புரண்டு வீழ வாளைபாய்* குறுங்குடி நெடுந்தகாய்,*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்,*
இரண்டுகூறு செய்துகந்த* சிங்கம் என்பது உன்னையே (2)
அன்புடன்
அனுபிரேம்
அழகான படங்களுடன்
ReplyDeleteஇனிய தகவலைத் தெரிந்து கொண்டேன்...
மகிழ்ச்சி.. நன்றி...
அருமையான பதிவு.
ReplyDeleteபடங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.அழகான படங்கள்.
பிரபந்த பாடல் பகிர்வு அருமை.
இசையால் இறைவனை வசபடுத்தும் கலையை அறிந்தவர் நம் பாடுவான்.