சேலம் நகரின் அருகில் உடையாபட்டி என்ற இடத்தில், இயற்கை எழில் சூழ்ந்து முற்றிலும் மலைகளுடன் காட்சியளிக்கிறது இந்த ஆசிரமக் கோவில்.
செல்லும் வழி |
ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் நெஞ்சத்தில் கனவு போல தோன்றிய, மலைகளும், அருவிகளும் நிறைந்த சிறிய குன்றே இன்று சேலம் அருகில் ஸ்காந்தாசிரமமாக மாறியுள்ளது.
முருகனின் சன்னதியும், முருகனின் தாயான பார்வதியின் சன்னதியும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
முருகனின் முகம் மிக தெளிவு ...நம்மை கண்டு சிரிப்பது போலவே இருக்கும் பரவசமான நிமிடங்கள் ..
நான்கு வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
16 அடி உயரத்தில் தத்திராத்ரேய பகவான் இங்கு உள்ளார்.
சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.
முருகன் சந்நிதியை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்களின் விக்கிரகங்கள் உள்ளன, மிகவும் தத்திருபமாகவும் அருமையாகவும் இருகின்றன.
வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.
ஸ்தல வரலாறு:
இந்த ஆசிரமத்தை நிறுவியவர் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் என்பவர், ஒரு முறை இவர் கனவில் வந்த முருக கடவுள் தனக்கு ஒரு கோவில் அமைக்கவேண்டி கூறினார். அதற்கான இடமாக இந்த கோவில் தற்போது இருக்கும் இடத்தை கூறிவிட்டு மறைந்துவிட்டார்.
முருகன் சொன்ன இடத்தை தேடி அலைந்த சுவாமிகள் பல இடங்கள் தேடி அலைந்து கனவில் முருகன் சொன்ன இடம் இதுதான் என உணர்ந்து கொண்டார்.
முருகன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து சுவாமிகள் கோவில் கட்டினார். காலமாற்றத்தில் இக்கோவில் மிகப்பெரிய கோவிலாக மிகப்பெரும் கண்கவர் சிற்பங்கள் கொண்ட கோவிலாக உருவெடுத்துள்ளது.
உடையாப்பட்டி குன்றில் அமைந்துள்ள ஸ்கந்தாசிரம்த்தில் நல்ல விசாலமான மண்டபம், வேதபாடசாலை, ஆசிரமத்தார் தங்குவதற்கு கூடங்கள் எல்லாம் கட்டப்பட்டு 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் இங்கு பத்தடிக்கு மேற்பட்ட உயரத்தில் பஞ்ச முக கணபதி, தண்டாயுதபாணி, அஷ்ட தசபுஜ மகாலக்ஷ்மி, தன்வந்திரி, பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு தனி தனி சந்நிதிகள் உள்ளன.
அங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்கந்தனின் 'ஸ்கந்த குரு கவசம்' சாந்தானந்த சுவாமிகள் அருளியதே ஆகும்.
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் .....
....பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445
கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447
சென்னை கிழக்கு தாம்பரத்தில் ஒரு ஸ்கந்தாஸ்ரமம் நிறுவி இறை உணர்வைப் பெருகச் செய்தார் சுவாமிகள்.
தம் வாழ் நாள் முழுவதையும் குரு சேவை, இறை சேவை, மக்கள் சேவை என்றே அர்ப்பணித்த ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் 27/05/2002ம் ஆண்டு ஜீவன் முக்தி அடைந்தார். அவரது விருப்படி அவரது அதிஷ்டானம் ஸ்ரீஸ்காந்தாஸ்ரமத்தில் உள்ளது.
அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா
அன்புடன்,
அனுபிரேம்
கன்னிமார் ஓடையை தேடினேன் அனு காணவில்லையே!
ReplyDeleteநாங்கள் சேலம் போன போது பாத்து இருக்கிறோம்.
சுவாமிகளிடம் பேசி இருக்கிறோம்.
சேலையூர் என்று நினைக்கிறேன் சென்னையில் உள்ள கந்தாஸ்ரமம் அதுவும் பார்த்து இருக்கிறேன்.அம்மன் எதிரில் முருகன் இருப்பார்.
பிருந்திங்காரா சிலையும் இப்போது சென்னையில் வைத்து இருக்கிறார்கள்.
படங்களும், செய்திகளும் மிக அருமை.
கன்னிமார் ஓடை பற்றி அப்பொழுது அறியவில்லை மா..வந்த பிறகு தான் தெரிந்து ...
Deleteசரி பரவாயில்லை ..நாங்கள் செல்லும் வழி தான் அதனால் திரும்ப ஒரு முறை சென்று காண வேண்டும் ,..
சென்னையில் இருக்கும் கந்தாஸ்ரமமும் நாங்கள் சென்று இருக்கிறோம் ..
நானே சென்று வந்த உணர்வைத் தந்த படங்கள்.
ReplyDeleteநன்றி சார்
Deleteஆஹா கமென்ட் வந்துச்சானே தெரியலையே...அடிச்சி பப்ளிஷ் பண்ண போது கரன்ட் கட்..
ReplyDeleteகந்தாஸ்ரமம் போயிருக்கோம்...முருகனைக் காண ஆயிரம் கண் வேண்டும் ..அந்த அளவுக்கு அழகு!! இந்தப் பாட்டையும் அங்கு பாடினேன் அப்போது.....இப்ப உங்க படங்கள் பார்க்கும் போது நிறைய மாற்றங்கள் தெரியுது..நானும் மகனும்.கன்னிமார் ஓடையை எதிர்பார்த்து போனோம் ஆனால் சிறு நீரோடையாவது இருக்குமோனு எதிர்பார்ட்தோம்...ஆனா அப்ப ட்ரையா இருந்துச்சு...கொஞ்சம் ஏமாற்றம்..எங்க போனாலும் நானும் மகனும் அங்க தண்ணீர் ஆறு அருவி, நீரோடை மலை என்று இருக்கானு பார்ப்போம்..ஹா ஹா ஹா கோயில் என்றாலும்.. இயற்கையில் கூடுதல் நாட்டம்...ஆர்வம்..இருந்துச்சுனா நாங்க அந்த இடத்தில் அதிக நேரம் செலவிட விரும்புவோம்...
படங்கள் அழகா இருக்கு அனு..சூப்பர்
கீதா
வந்துச்சு கா கமெண்ட்..
Deleteபொதுவா நாங்களும் செல்லும் இடங்களில் நீருடன் தான் அமையும்...
இந்த முறை தெரியவில்லை அதனால் தவறவிட்டாச்சு...அடுத்த முறை பார்த்துவிடலாம்..
மிக அழகிய படங்களுடன் பகிர்வு அருமை.
ReplyDeleteஅழகான படங்கள். அமைதியான சூழல் ரசிக்க முடிந்தது. நன்றி.
ReplyDeleteஅமைதியான சூழல். அழகான இடம். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்.
ReplyDelete