24 November 2018

திருப்பாணாழ்வார்

இன்று  திருப்பாணாழ்வார்  அவதார தினம் .....

கார்த்திகையில் ரோஹிணி..








 திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்!


உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே

உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்த வள்ளல் வாழியே

வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே

மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே

அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே

அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே

செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே

திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே...!








தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை,

பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி,

 தூய ஆடை, உந்தி(தொப்புள்),

திருமார்பு, கண்டம்(கழுத்து),

பவளவாய், கமலக்கண்கள்,

 திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் ரசித்து

 பாடி ,

பரவசமடைந்து,

இறுதியில்.....


கொண்டல் வ‌ண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்*  என்உள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி  அரங்கன்*  என் அமுதினைக்-
கண்ட கண்கள்*  மற்றுஒன்றினைக்*  காணாவே. (2)

என்று பத்துப்பாசுரங்களையும் பாடிமுடித்தார்.





 திருப்பாணாழ்வார் கடைசிப்பாகத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று இவ்வுலகை விட்டு மறைந்தார்....






930
   

சதுரமா மதிள்சூழ்*  இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர ஓட்டி,*  ஓர் வெங்கணை*  உய்த்தவன் ஓத வண்ணன்*

மதுரமா வண்டு பாட*  மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,*  திருவயிற்று- 
உதர பந்தம்*  என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.

நான்காம் பாசுரத்திலே உதரபந்தனத்தை சேவிக்கிறார்.

நான்கு பக்கத்திலும் மதில்களால் சூழப்பட்ட இலங்கையின் தலைவனான இராவணனின் பத்து தலைகளையும் அருந்து விழச் செய்து, போரில் தோற்று ஓடச் செய்தவனும், வண்டுகள் இசைபாட, மயில்கள் ஆடும் படியதான அழகிய சோலையை உடைய , அரங்கத்தம்மானாகிய இராமபிரானுடைய உதரபந்தனம் (யசோதையால் கட்டப்பட்ட கயிற்றின் அடையாளம்) என் நெஞ்சில் உலாவுகின்றது.






931

பாரமாய*  பழவினை பற்றுஅறுத்து,*  என்னைத்தன்-
வாரம்ஆக்கி வைத்தான்*  வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல்  அறியேன்*  அரங்கத்து அம்மான்,*  திரு-
வார மார்பத‌ன்றோ*  அடியேனை ஆட்கொண்டதே*


இந்த பாசுரத்திலே திருமார்பின்அழகைக் கண்டு ஆனந்திக்கிறார்.
 அவனுடைய திருமார்பானது ஆழ்வாரை எப்படி ஆட்படுத்திக் கொண்டது என்பதை உணர்த்தும் பாசுரமாக அமைந்த பாசுரம் ஆகும்.

“என்னுடைய பழைய வினைகளை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தொலைத்ததோடு மட்டும் அல்லாமல் என்னை அவனுக்கு ஆட்படுத்தியும், என்னுள் புகுந்து தங்கியும் விட்டான் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்”.







932

துண்ட வெண்பிறையன்*  துயர் தீர்த்தவன்*  அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்*  அரங்கநகர் மேய அப்பன்*

அண்டர் அண்ட‌ பகிரண்டத்து*  ஒரு மாநிலம் எழுமால்வரை,*  முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்*  அடியேனை உய்யக் கொண்டதே.


ஆறாம் பாசுரத்திலே கண்டம் என்று சொல்லக்கூடிய திருக்கழுத்துப் பகுதியை அனுபவிக்கிறார்.

வெண்பிறையன் துயர் தீர்த்த, வண்டு வாழ் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்திலே எழுந்தருளி இருக்கும் திருவரங்கனாதனின் கழுத்தானது ஏழு உலகங்களையும் பிரளயகாலத்திலே அடக்கிக் கொண்டது. அந்த கண்டமானது தனக்கும் உய்வு உபாயமாக இருந்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.







ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!



 அன்புடன்
அனுபிரேம்



3 comments:

  1. அருமையான பதிவு.
    அழகான படங்கள், பாசுரங்கள் பகிர்வுக்கு நன்றி.
    ஓம் நமோ நாராயணாய நம!!
    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  2. அழகான படங்கள்.

    சிறப்பான பாசுரங்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. படங்கள் பார்த்துப் பரவசமானேன்.. அழகு.

    ReplyDelete