இன்று திருமங்கையாழ்வார் அவதார தினம் .....
கார்த்திகையில் கார்த்திகை
திருமங்கையாழ்வார் வாழி திருநாமம்!
கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .....!
திருமங்கையாழ்வார் வைபவம் இங்கே போன வருட பதிவு ...
திருமங்கையாழ்வார் தெய்வக் காதல் பற்றிய பாடல்களில், தம்மை நாயகியாகவும் (பரகால நாயகி) , திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில்,
காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சியை நாயகி மேற்கொள்வதாக அமைத்து,சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு மடல் பாடல்களைப் பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார் காலத்துக்கு முன்பும் பெண்கள் மடலேறுவதாக சில குறிப்புகள் கலித்தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால் அவை, காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சமூக ஒழுங்கை மீறி மடலூர்ந்து வருவேன் என்று அடிபணிய வைக்கும் வகையில் உள்ளன.
தமிழில் அகத்துறை நூல்களில் ‘மடல்’ ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார்.
சங்க இலக்கியங்கள் மடல் என்று பெரும்பாலும் பனை மடலையே குறிக்கும். விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே காதலன் தோன்றிப் பிடிவாதம் செய்து அடையும் முரட்டுக் காதல்.
அவன் மேல் இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதிப்பார்களாம்.
இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது.
தான் ஒரு ஆண் என்றதால், தன் தன்மைக்கு ஏற்ப மடல் ஏறத் துணிந்தார் ஆழ்வார்.
ஆனால் ‘உலகில் ஆண் என்ற புருஷாகாரம் பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே உரியது’ என்று புருஷ சூக்தம் புகல்வதால், பகவானைத் தவிர அனைவரும் பெண்களே. இதையே தன் சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் மூலமாகக் கொள்கிறார் ஆழ்வார்.
பெண்கள் மடலேறுதல் தகாது என்று இலக்கணம் சொன்னபோதும், தன்னை ஒரு பெண்ணாக எண்ணி திருமால் மீது காதல் கொண்ட பெண் அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாகப் பாடி, புரட்சி செய்கிறார்.
கண்ணன் கிடைத்திலன் என்பதன் காரணத்தால் திருமங்கையாழ்வார் பெண்ணாகி மடலேறினார் . ஓர் இளம் பெண்ணின் நோக்கிலிருந்தும் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.
சிறிய திருமடலிலே நாராண நாமத்தையும், பெரிய திருமடலில் கண்ணன் என்ற நாமத்தையும் எதுகை பயில்கிறார் ஆழ்வார்.
திருமங்கையாழ்வாரின் சிறப்புக்கள்
திருமங்கையாழ்வாரின் வாள் வீச்சும், கவிதை வீச்சும் வேறு எவரிடமும் காண முடியாதவை.
பெரிய திருமொழி (1084 பாடல்கள்)
திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் – 47 அடிகள்)
சிறிய திருமடல் (ஒரு பாடல் – 155 அடிகள்)
பெரிய திருமடல் (ஒரு பாடல் – 297 அடிகள்)
என்கிற ஆறு வகை பிரபந்தங்களை அருளிச் செய்து, அதிகமாக 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.
திருமங்கை மன்னன் ,
மனிதனாகப் பிறந்து, முரட்டு வீரனாக வளர்ந்து, அரசனாகப் பதவி அனுபவித்து, மங்கையின் மீது காதல் கண்டார்,
அந்தக் காதலியின் வார்த்தைகளால், எம்பெருமான் மீது காதல் கொண்டார்,
பரம வைஷ்ணவனாக மாறி, அரச பொறுப்பைத் துறந்து அரங்கனுக்காக,அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்” மாறினார்,
எம்பெருமானையே நேரில் கண்டு, அவன் திருவாயினாலே
“ஓம் நமோ நாராயணாய” என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார்,
அரங்கன் ஆலயத்தில்,அரங்கனைப் பாடி, அரங்கனை மகிழ்வித்து, அவனிடமே ஆழ்வார்களின் தமிழுக்கு ஒரு விழா வேண்டி, இன்று வரை, இன்னும் வரும் காலங்களிலும், தொடர்ந்து நடைபெறும் வகையில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறக் காரணமானவர், திருமங்கையாழ்வார்.
துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்.
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்
2673
காரார் வரைகொங்கை கண்ணர் கடலுடுக்கை*
சீரர் சுடர்சுட்டி செங்களுழிப் பெராற்று*
பெரார மார்பின் பெருமா மழைக்குந்தல்*
நீராரவெலி நிலமங்கை என்னும்* இப்
பாரோர் சொலப்பட்ட மூன்னன்றெ* (2) -- அம்மூன்றும்
2674
ஆராயில்தானே அறம்பொருள் இன்பமென்று*
ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்*
சீரார் இருலையும் எய்துவர்* (2) -- சிக்கெனமது
2675
ஆரானும் உண்டுஎன்பார் என்பதுதான் அதுவும்*
ஓராமைஅன்றே? உலகத்தார் சொல்லும் சொல்*
ஓராமையாம்ஆறு அது உரைக்கேன் கேளாமே*
காரார் புரவிஏழ் பூண்ட தனியாழி*
தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு*
ஆராஅமுதம் அங்குஎய்தி* -- அதில் நின்றும்
அன்புடன்,
அனுபிரேம்

பரகால நாயகி யாக திருமங்கையாழ்வார் |

ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
அன்புடன்,
அனுபிரேம்
பக்தி இலக்கியத்தில் மடல் வகையை அறிமுகப்படுத்திய ஆழ்வாரின் தரிசனம் கண்டோம்.
ReplyDeleteமிக அருமையான பதிவு அனு.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.
பாடல் பகிர்வு செய்திகளும் அருமை.
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
மடல் வகை - புதியதாய் தெரிந்து கொள்ள முடிந்தது - மகிழ்ச்சி.
ReplyDeleteசிறப்பான தகவல் தொகுப்பு.
மிக அருமையான திருமங்கை ஆழ்வார் படத்தை பதிவு செய்ததிற்கு நமஸ்காரம். என் அப்பா என்னுடைய பள்ளி நாட்களில் அவர் தொழில் சுமந்து வேடுபறி உத்சவம் காண அழைத்து சென்ற நினைவுகள் இப்பொது வருகிறது திருமங்கை ஆழ்வார் என்ற கூறியவுடன் Goose Bumps ஆகிறது மிக்க நன்றி
ReplyDelete