20 November 2018

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்

 ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி – திருவோணம்)







 ஸ்ரீபிள்ளை லோகாசார்யர் வாழி திருநாமம்


அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே

ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே

முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே

மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே

நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே

நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே

உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே

உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே




பிள்ளை லோகாசார்யர்  -வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர் ..

இவரது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையும் சிறந்த ஆச்சாரியர் ,.

இவர் வைணவ க்ரந்தங்கள் பல சாதித்து அருளி இருக்கிறார் ..







ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். ( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்).


கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுத்தான்.  கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான். 

தொண்டை மண்டலத்தைச் சேதப்படுத்தி திருச்சியை நோக்கி விரைந்தான்.

ஸ்ரீரங்கத்தை நோக்கி முகம்மதிய படை வருகிறது என்ற செய்தி கேட்டு அரங்கனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று அஞ்சி, ...



திருவரங்கனின் மூலவரைக் காப்பதற்காக கருவறை வாசலை கல்சுவரால் அடைத்து, சுவருக்கு முன்பு தற்காலிகமாக ஒரு விக்கிரகத்தை வைத்தனர்.

ஸ்ரீரங்க நாச்சியார் மூலவரையும், திருவாபரணங்களையும் வில்வ மரத்தின் அடியிலே பாதுகாப்பாக வைத்து, மற்றைய ரகசிய அறைகளையும் அடையாளம் தெரியாமல் செய்தார்கள்.



பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க சிஷ்யர்களும்,  பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம்  தென் திசை நோக்கி சென்றனர் ....


கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்து யானை மலை அடிவாரத்தில் ஜ்ஜோதிஷ்குடி என்ற ஊருக்குச் சென்று சேருகிறார்கள் ( கொடிக்குளம் ). அங்கேயே நம்பெருமாளுக்கு நித்திய திருவாராதனம் முதலியவற்றைச் செய்கிறார்.



கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார் பிள்ளை லோகாசார்யர் .

அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து ஜ்யோதிஷ் குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தித் திருவரசு எழுப்பினார்கள்.









பிறகு நம்பெருமாள் மதுரை அழகர் மலை, கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு திருநாராயணபுரம் பிறகுத் திருமலை, சிங்கபுரம்(செஞ்சிக்கு அருகில்) பிறகு மீண்டும் 48 வருடம் கழித்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.


கடந்த நவம்பர் 14 ம் தேதி சுவாமிகளின் திருநட்சத்திரம் அன்று ..மதுரையின் யானை மலை அடிவாரத்தில்  -கொடிக்குளத்தில் நடைபெற்ற சேவையில்   அப்பா எடுத்த படங்கள் அப்பாவின் பார்வையாக ...








ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்  திருவடிகளே சரணம் 


406.   
பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 
குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.



அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. https://mathysblog.blogspot.com/2016/11/blog-post_7.html
    அனு நானும் பிள்ளை லோகாசார்யார் திருவரசு சென்று வந்து போட்ட பதிவு.
    அப்பாவின் பார்வையில் மிக அழகான பதிவு.

    ஸ்ரீபிள்ளை லோகாசார்யார் திருவடிகளே சரணம் .

    ReplyDelete
    Replies
    1. ஆமா மா உங்க தளத்திலே நீங்கள் பதிவிட்ட போதே கண்டு தரிசித்து இருக்கிறேன் ..

      Delete
  2. பிள்ளை லோகாசார்யார் பற்றி கூடுதல் செய்திகளை அறிந்தேன். அருமை.

    ReplyDelete
  3. பிள்ளைலோகாச்சார்யார் திருவரசுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது செல்லவேண்டும். 117 வயதில் நம்பெருமாளோடு அரங்கத்திலிருந்து கால் நடையாக மதுரை வரை செல்லவேண்டுமானால் எத்தகைய பக்தி இருந்திருக்கவேண்டும்.....

    //குரவரும்பக் கோங்கலரக்* குயில்கூவும் குளிர்பொழில்சூழ்//
    குரவ மரங்கள் அரும்ப, கோங்குமரங்கள் நிற்க, குயில்கள் கூவும் குளிர்ச்சியான பொழில்கள் இப்போவும் திருவரங்கத்துல இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவு இல்லையென்றாலும் இப்பொழுதும் உண்டு பல தோப்புக்கள் ...

      Delete