16 November 2020

துலா மாதத்தில் ...

 வாழ்க வளமுடன் ...


துலா மாதம் முடிந்து இன்று கார்த்திகை ஒன்று , இன்று முடவன் முழுக்கு . இந்த வருடம்  முதல் முறையாக துலா முழுக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தது. அன்று எடுத்த வீடியோ பதிவுடன் இன்றைய பதிவு ...



ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர்.

இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர். 

‘ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம்’ என்கின்றன ஞான நூல்கள். 

குடகிலிருந்து உற்பத்தியாகி பூம்புகார் கடலோடு கலக்கும் வரை இப்புண்ணிய நதிக்கரையில் மூன்று இடங்களில் மிகவும் விசேஷமான தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.  முதலாவது திருப்பராய்த்துறை ஆகும். இரண்டாவது கும்பகோணம், மூன்றாவது மயிலாடுதுறை.  

காசிக்கு சமமாகக் கருதப்படும் திருவையாற்றில் ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்...காசிக்கு சமமாகக் கருதப்படும் சிவஸ்தலங்களில் காவிரியில் 23 புகழ்பெற்ற படித்துறைகள் கொண்டு உள்ள ஒரே தலம் திருவையாறு.

ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. 

துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்கு முன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. 


மேலும், உலகத்தில் உள்ள சகல தீர்த்தங்களும், தங்களிடம் மக்கள் நீராடி போக்கிக்கொண்ட பாவங்கள் நீங்க துலா மாதத்தில் காவிரி நதியில் நீராடி புனிதம் பெறுகின்றன.

தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்கிறது காவிரி புஜங்கம் என்னும் நூல். 

துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் நசித்துவிடும். 

அழகு, ஆயுள், உடல்நலம் வளம் பெறும். துலா மாதத்தில் காவிரி யில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி 30ந் தேதி நீராடி பலன் பெறலாம். 

அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

‘ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது. 


 காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும் என்றார் பிரம்மா, நதி தேவதைகளிடம். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். 


ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக்குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள். 

ஐப்பசியில் காவிரிக் கரையில் உள்ள திருத்தலங்கள் போற்றப்படுகின்றன.

ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் திருக்கோயில்,திரு இந்தளூர், மயிலாடுதுறை- துலா பிரமோற்சவம்.....

1 ஆம் திருநாள் திவ்யசேவை



2 ஆம் திருநாள் காலை உரியடி கண்ணன் திருக்கோலம்







2 ஆம் திருநாள் மாலை -துவாரகா கண்ணன் திருக்கோலம் 





3 ஆம் திருநாள் -காலை உலகளந்த பெருமாள் திருக்கோலம்
 



மாலை ராஜதர்பார் திருக்கோலம் 




4 ஆம் திருநாள் - கஜேந்திரமோக்ஷ அலங்காரம்





பெரிய திருமொழி - நான்காம் பத்து 

ஒன்பதாம் திருமொழி – நும்மைத்தொழுதோம்


1328

நும்மைத்தொழுதோம் நுந்தம்பணிசெய்திருக்கும் நும்மடியோம் * 

இம்மைக்குஇன்பம்பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே! * 

எம்மைக்கடிதாக்கருமம்அருளி ஆவா! என்றிரங்கி * 

நம்மைஒருகால்காட்டிநடந்தால் நாங்கள்உய்யோமே? (2)

 - 1


1329

சிந்தைதன்னுள் நீங்காதிருந்ததிருவே மருவினிய 

மைந்தா! * அந்தணாலிமாலே! சோலைமழகளிறே! *

நந்தாவிளக்கின்சுடரே! நறையூர்நின்றநம்பீ! * என் 

எந்தாய்! இந்தளூராய்! அடியேற்குஇறையும் இரங்காயே. (2) 


 - 2


அன்புடன் 

அனுபிரேம் 

4 comments:

  1. துலா மாதத்தில் எங்கு காவேரி ஸ்னானம் செய்தீர்கள் நீங்கள் எல்லோரும்?

    இங்கு எங்களுக்கு காவேரி தண்ணீர் குழாயில் சேர்ந்து வருவதால் நாங்களும் காவேரியில் குளித்த மாதிரிதான்.

    பரிமளரங்கநாதர் படங்கள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் ஸ்ரீரங்கம், மேலூர் படிகரையில் ஸ்னானம் செய்தோம்..

      இங்கும் குழாயில் காவேரி தண்ணீர் தான் வருகிறது..ஆனாலும் ஆற்றில் சென்று ஸ்னானம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததால் பயன்படுத்திக் கொண்டோம்.

      பரிமளரங்கநாதர் படங்களை ரசித்தமைக்கு நன்றிகள்...

      Delete
  2. துலா தரிசனம் இனிமை..
    காவிரியாள் போற்றி..
    கங்கையாய் போற்றி.. போற்றி..

    ReplyDelete
  3. படங்கள் ரொம்ப அழகா இருக்கு அனு. துலா மாதம் அதற்கு இப்படி ஒன்று இருக்கு என்பதெல்லாம் எனக்கு புகுந்த வீடு வந்த பிறகுதான் தெரியும்!

    கீதா

    ReplyDelete