29 November 2020

திருமங்கையாழ்வார்

  திருமங்கையாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  ......

கார்த்திகையில் கார்த்திகை .....


 திருமங்கையாழ்வார்  வாழி திருநாமம்!கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே

நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே

இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே

இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே

வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .....!திருமங்கையாழ்வார் 

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில்)

தந்தை               : ஆலிநாடுடையார்

தாய்                  : வல்லித்திரு அம்மையார்

பிறந்த காலம்   : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்

நட்சத்திரம்        : கார்த்திகை (பவுர்ணமி திதி)

கிழமை             : வியாழன்

அம்சம்              : திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சமாக  பிறந்தவர்                                                   
எழுதிய நூல்    :பெரிய திருமொழி,திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,   ,    திருஎழுகூற்றிருக்கை, பெரிய  திருமடல், சிறிய திருமடல்.

திருமங்கை மன்னன் ,

மனிதனாகப் பிறந்து, முரட்டு வீரனாக வளர்ந்து, அரசனாகப் பதவி அனுபவித்து, மங்கையின் மீது காதல் கண்டார்,அந்தக் காதலியின் வார்த்தைகளால், எம்பெருமான் மீது காதல் கொண்டார்,

பரம வைஷ்ணவனாக மாறி, அரச பொறுப்பைத் துறந்து அரங்கனுக்காக,அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்” மாறினார்,


எம்பெருமானையே நேரில் கண்டு, அவன் திருவாயினாலே,
“ஓம் நமோ நாராயணாய” என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார்,


அரங்கன் ஆலயத்தில்,அரங்கனைப் பாடி, அரங்கனை மகிழ்வித்து, 
அவனிடமே ஆழ்வார்களின் தமிழுக்கு ஒரு விழா வேண்டி, இன்று வரை, 

இன்னும் வரும் காலங்களிலும், தொடர்ந்து நடைபெறும் வகையில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறக் காரணமானவர், திருமங்கையாழ்வார்.


 துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்.

 அதிகமாக 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தவர் இவர் ...ஶ்ரீஆழ்வார் ஶ்ரீகுமுதவல்லி நாச்சியாருடன் ஶ்ரீபாண்டுரங்கனாக திருக்கோலம் ...

திருக்குறுந்தாண்டகம் 


தொண்டெல்லாம்பரவிநின்னைத் தொழுதுஅடிபணியுமாறு 
கண்டு * தான்கவலைதீர்ப்பான்ஆவதே? பணியாய் எந்தாய்! * 
அண்டமாய்எண்திசைக்கும் ஆதியாய்! நீதியான * 
பண்டமாம்பரமசோதி! நின்னையேபரவுவேனே. 

11 2042


ஆவியைஅரங்கமாலை அழுக்குடம்பெச்சில்வாயால் * 
தூய்மையில்தொண்டனேன்நான் சொல்லினேன்தொல்லைநாமம் * 
பாவியேன்பிழைத்தவாறென்று அஞ்சினேற்குஅஞ்சலென்று *
காவிபோல்வண்ணர்வந்து என்கண்ணுளேதோன்றினாரே.

12 2043


இரும்பனன்றுண்டநீரும் போதரும்கொள்க * என்றன் 
அரும்பிணிபாவமெல்லாம் அகன்றனஎன்னைவிட்டு * 
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில்கொண்ட * 
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணைகளிக்குமாறே. 

13 2044


காவியைவென்றகண்ணார் கலவியேகருதி * நாளும் 
பாவியேனாகஎண்ணி அதனுள்ளேபழுத்தொழிந்தேன் * 
தூவிசேரன்னம்மன்னும் சூழ்புனல்குடந்தையானை * 
பாவியென்பாவியாது பாவியேனாயினேனே.

14 2045


முன்பொலாஇராவணன்தன் முதுமதிளிலங்கைவேவித்து * 
அன்பினால்அனுமன்வந்து ஆங்கடியிணைபணியநின்றார்க்கு * 
என்பெலாம்உருகியுக்கிட்டு என்னுடைநெஞ்சமென்னும் * 
அன்பினால்ஞானநீர்கொண்டு ஆட்டுவன்அடியனேனே. 

15 2046


திருமங்கையாழ்வார் ஆலிலை கிருஷ்ண திருக்கோலம்...
மாயமான்மாயச்செற்று மருதிறநடந்து * வையம் 
தாயமாபரவைபொங்கத் தடவரைதிரித்து * வானோர்க்கு 
ஈயுமால்எம்பிரானார்க்கு என்னுடைச்சொற்களென்னும் * 
தூயமாமாலைகொண்டு சூட்டுவன்தொண்டனேனே. 

16 2047


பேசினார்பிறவிநீத்தார் பேருளான்பெருமைபேசி * 
ஏசினார்உய்ந்துபோனார்என்பது இவ்வுலகின்வண்ணம் * 
பேசினேன்ஏசமாட்டேன் பேதையேன்பிறவிநீத்தற்கு * 
ஆசையோபெரிதுகொள்க அலைகடல்வண்ணர்பாலே. 

17 2048


இளைப்பினை இயக்கம்நீக்கி இருந்துமுன்இமையைக்கூட்டி * 
அளப்பிலைம்புலனடக்கி அன்புஅவர்கண்ணேவைத்து * 
துளக்கமில்சிந்தைசெய்து தோன்றலும்சுடர்விட்டு * ஆங்கே 
விளக்கினைவிதியின்காண்பார் மெய்ம்மையேகாண்கிற்பாரே. 

18 2049


பிண்டியார்மண்டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணும் 
முண்டியான் * சாபம்தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும் 
கண்டியூர்அரங்கம்மெய்யம் கச்சிபேர்மல்லையென்று 
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? (2)

19 2050


வானவர்தங்கள்கோனும் மலர்மிசையயனும் * நாளும் 
தேமலர்தூவியேத்தும் சேவடிச்செங்கண்மாலை * 
மானவேல்கலியன்சொன்ன வண்தமிழ்மாலைநாலைந்தும் * 
ஊனமதின்றிவல்லார் ஒளிவிசும்பாள்வர்தாமே. (2) 

20 2051


ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!அன்புடன்,
அனுபிரேம்

3 comments:

 1. அருமை.... இன்று திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்.

  என்னவோ மனத்தில் ஆலிலை கிருஷ்ணர் திருக்கோலம் ஒட்டவில்லை, பின்னணியில் அரசமரக் கிளை வேறு.

  இன்று இந்த இடுகை வரும் என்று எதிர்பார்த்தேன்.

  ReplyDelete
 2. படங்கள் அனைத்துமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 3. திருமங்கையாழ்வாரின் அனைத்துப் பாடல்களையும் படித்துள்ளேன். இப்பதிவு மூலமாக மறுபடியும் படிக்க வாய்ப்பு.

  ReplyDelete