05 November 2017

கோபி மஞ்சூரியன்...!

கோபி மஞ்சுரியன்


அனைவருக்கும் பிடித்த சுவையான கோபி மஞ்சுரியன்...

இன்றைய....படங்களுக்காக சமையலில்...







 தேவையான பொருள்கள்



காலிபிளவர் - 1
மைதா மாவு - 3 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி -1
குடமிளகாய் - 1
பூண்டு - 6
மிளகுதூள்  - 1 ஸ்பூன்
 சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மற்றும்
கறிவேப்பிலை..

செய்முறை...

நன்றாக சுத்தம் செய்து  கழுவிய காலிபிளவரை.. மைதா., சோளமாவு, உப்பு, நீர் சேர்த்த  கலவையில் சேர்த்து கலக்க வேண்டும்...



பின் எண்ணையில் பொரிக்கவும்....




வெண்மை நிறத்தில் ...  பொறித்த காலிபிளவர்







ஒரு வாணலில் எண்ணெய் விட்டு ...அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு,  குடமிளகாய் , மிளகுதூள், தக்காளி  சாஸ், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி சிறுது உப்பு சேர்க்கவும்....






அதில் வறுத்து வைத்திருத்த காலிபிளவரை போட்டு பிரட்டினால் சுவையான கோபி மஞ்சுரியன் ரெடி.







அன்புடன்

அனுபிரேம்



16 comments:

  1. அருமை.. என்ன ஒன்னு.. நமக்கு இந்த புள் பூண்டு வகையறா கொஞ்சம் தகராறு.

    இம்புட்டு நாளா இதை சைனீஸ் டிஸ்ன்னு யோசித்துனு இருந்தேன்.

    ReplyDelete
  2. வாங்க விசு சார்...

    உங்க முதல் வருகைக்கு நன்றி...

    இப்பவும் இது சைனீஸ் டிஷ் தான்..

    ReplyDelete
  3. காப்சிகம் -என்பது என்ன ! விளக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா ..

      தங்களின் வருகைக்கு மிக நன்றி...

      காப்சிகம்..குடை மிளகாய்...

      ஒரு ஆர்வத்தில் அப்படியே எழுத்திவிட்டேன்...தற்போது பதிவிலும் மாற்றி விட்டேன்...

      Delete
  4. ஆஹா.. நாவூறுகிறது. அருமை.

    ReplyDelete
  5. கோபி மஞ்சூரியன்..

    இங்கு எப்போதாவது செய்வதுண்டு..
    மற்றபடி காலிபிளவரை அடிக்கடி சாம்பார் குருமா வைகையறாக்களில் சேர்த்துக் கொள்வேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. மழைக்கு ஏற்ற ஈவினிங் டிபன் குறிப்புடன் படங்களுடன் அருமை

    ReplyDelete
  7. சிறந்த உணவு
    நல்ல வழிகாட்டால்

    ReplyDelete
  8. கோபி மஞ்சூரியன் செய்ய நான் காலிப்ளவரை பொறித்தால் எண்ணைய் அதிகமா குடிக்குது. அதானால் செய்வது குறைவது. உங்க முறையில் செய்து பார்க்கிறேன் அனு. படத்தில் பார்க்க நல்லாயிருக்கு.

    ReplyDelete
  9. எல்லா வயதினருக்கும் பிடித்த உணவு இது..

    ReplyDelete
  10. ஆஹா அப்படியே சைனீஸ் டிஸ் போலவே இருக்கு சூப்பர்.

    ReplyDelete
  11. சூப்பரா இருக்கு அனு! பார்த்ததுமே நாவுல நீர் ஊறுது!! மகன் இருந்த வரை செய்துவந்தேன். இப்ப அவ்வளவா செய்யறதில்லை...

    கீதா

    ReplyDelete
  12. மழைக்கும் அதுக்கும் பார்த்தவோடனே ஜொள்ளூறுது :) அருமை அனு. ஒரு கப் இங்கே தள்ளுங்க :)

    ReplyDelete
  13. ம்ம்ம்ம்
    பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது.

    ReplyDelete