பதினான்காம் பாசுரம். இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்
எங்களை முன்னதாக வந்து எழுப்புவதாக வாயாலே சபதம் செய்த பரிபூர்ணையே!
வெட்கமற்றவளே! நன்றாகப் பேசக் கூடியவளே!
உங்கள் புழைக்கடையில் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் குளத்தினுள் செங்கழுநீர் புஷ்பங்கள் மலர்ந்து கருநெய்தல் புஷ்பங்கள் குவிந்துகொண்டன பார்!
காவி உடையை அணிந்தவரும் வெளுத்த பற்களையும் உடைய தபோ வேஷத்தை உடைய ஸந்யாஸிகளும் தங்களுடைய தெய்வ ஸந்நிதிகளில், சங்கு ஊதுகைக்காகப் போகின்றனர்.
திருவாழியையும் திருச்சங்கையும் அழகாக தரிக்கும் பெரிய கைகளை உடையவனாய்,
அழகிய செந்தாமரைக் கண்களை உடையவனான ஸர்வேச்வரனை பாடுவதற்காக எழுந்திரு.
நன்றி - Upasana Govindarajan Art |
திருச்சேறையில் அருளும் ஸ்ரீ கோதை பிராட்டி. |
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய 14ஆம் நாள் திருப்பாவை பாடலும், அதன் விளக்கங்களும் நன்றாக இருந்தது. பக்தியுடன் பரந்தாமனை வழிபடுவோம். திருச்சோறை ஸ்ரீ கோதை நாச்சியாரை சேவித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் திருவடிகள் போற்றி போற்றி.
ReplyDeleteபங்கயக் கண்ணான் திருவடிகள் போற்றி போற்றி.