63. "அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே"
சக்கரவர்த்தி என்ற ஒரு வைணவப் பெரியவர் வைணவம் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்தார். ராமானுஜருக்குச் சீடரானார். ஒரு நாள் அவர் காவிரியில் நீராடும்போது அங்கே ஒரு சவம் மிதந்து வந்தது கரையில் ஒதுங்கியது.
நீராடிக்கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் வேறு இடத்துக்குச் சென்று விட்டார்கள்.
நல்லான் அந்தப் பிணத்தின் அருகில் சென்று பார்த்தபோது அப்பிரேதத்தின் தோள்களில் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டிருப்பதைப் கண்டார்.
ஒரு விஷ்ணு பக்தனுடைய பிரேதம் என்று அவருக்குத் தெரிய வந்தது.
”ஒரு வைணவரின் உடல் அல்லவா இது!” என்று சுற்று முற்றும் பார்த்தார் யாரும் அருகில் வரவில்லை.
ஒரு வைணவ பிரேதத்தை அப்படியே விட்டு விட்டுப் போக அவருக்கு மனது இடம் கொடுக்கவில்லை. அந்தப் பிரேதத்துக்கு அவரே முறைப்படி நீராடச் செய்வித்து. திருமண் இட்டு, வைதீக முறைப்படி ஈமச் சடங்குகளைச் செய்தார்.
இதைப் பார்த்த ஊர் மக்கள் முகம் சுளித்து ”உயர்ந்த அந்தணர் குலத்தில் பிறந்த நீங்கள் என்ன ஜாதி என்று தெரியாத ஒரு அனாதைப் பிணத்துக்கு வேத முறைப்படி சடங்குகள் செய்யலாமா ?” என்று சக்ரவர்த்தியை ஏசினார்கள்.
இவர் பிணத்துக்குத் தீமூட்டிய காரியம் ஊர் முழுக்க காட்டுத் தீப்போலப் பரவியது. அவரை ஊரைவிட்டு விலக்கி வைத்தார்கள்.
சக்கரவர்த்தி என்ன செய்வது என்று தெரியாமல் அவர் இல்லத்தில் துயரத்தில் முடங்கினார்.
நாளடைவில் அவரைச் சக்ரவர்த்தி என்று கூப்பிடாமல் எல்லோரும் ‘பொல்லான்’ என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.
ஊரில் உற்சவம் தொடங்கியது.
எல்லா இடங்களிலும் கோலாகலமாக அலங்காரங்கள் செய்து, மக்கள் எல்லோரும் கோயிலில் குழுமியிருந்தார்கள்.
சக்கரவர்த்தி மட்டும் தன் இல்லத்திலேயே இருந்தார்.
பெருமாள் வீதி புறப்பாட்டுக்கு அலங்காரங்களுடன் புறப்படும் சமயம் அர்ச்சகர் மூலமாக “அவன் ஊருக்குப் பொல்லான்; நமக்கு நல்லான்” என்று பெரிதாக முழக்கமிட்டார்.
ஊர்மக்கள் சக்கரவர்த்தியின் பெருமையை அறிந்து அவர் இல்லத்துக்குச் சென்று மன்னிப்பு வேண்டினர்.
அவரைக் கோயிலுக்கு அழைத்து வந்து உரிய மரியாதைகளைச் செய்தார்கள்.
அன்று முதல் அவரை ‘நல்லான் சக்ரவர்த்தி’ என்று அழைக்கப்பட்டார்.
இந்த நல்லான் சக்கரவர்த்தி பிறகு கொங்கு தேசம் வழியாகச் சென்றபோது அங்கே வேடுவர்களைக் கண்டார். ராமானுஜரின் பெருமைகளையும் வைணவத்தின் நல் உபதேசங்களையும் அவர்களுக்குப் போதித்தார். நல்லானின் சிஷ்யர்கள் ஆனார்கள்.
இவர்களே ராமானுஜர் கொங்கு தேசம் சென்றபோது உதவினார்கள். அப்போது ராமானுஜர் அந்த வேடுவர்களின் அன்பை பார்த்து ‘நல்லான் என்ற ஒரு கார்மேகம் இந்த இடம் வழியாகச் செல்லும்போது அன்பு மழை பொழிந்து சென்றிருக்கிறது!” என்றார்.
“சாமி! இறந்தவரின் தோளில் அருள் ஆழி ( சக்கரத்தை ) ஒன்றையே கண்ட நல்லான் மற்றவற்றைக் காணவில்லை. பெருமாளுடைய ஆழியைக் கண்டு அதில் பெருமாளுடைய அருள் ஆழத்தைக் கண்டார். நான் நல்லான் போலப் பெயர் எடுக்கவில்லையே ! அதனால் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
64. திருக்கடிகை
ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ
ரகசியம் தொடரும்...
No comments:
Post a Comment