23 October 2023

ஸ்ரீ பொய்கையாழ்வார்

 இன்று ஸ்ரீ பொய்கையாழ்வார் திருநட்சித்திரம் -  ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.....







பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா ஓணத்தில்  செகது உதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம்  செழிக்க வந்தான் வாழியே

வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே

வனச மலர்க் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே

வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவன்  திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன் முடியும்  திருமுகமும் பூதலத்தில் வாழியே .


பொய்கையாழ்வார்  

பிறந்த ஊர்         - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்       -  ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை             - செவ்வாய்

எழுதிய நூல்    -  முதல் திருவந்தாதி

பாடல்கள்        - 100

சிறப்பு              - திருமாலின் சங்கின் அம்சம்





ஆழ்வார்களில் சரோயோகி என அழைக்கப்படுகின்ற பொய்கையாழ்வார்  முதல் ஆழ்வாராக அழைக்கப்படுகின்றார். இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் எழுந்தருளியுள்ள யதோக்தகாரி சுவாமி புஷ்கரணியில் பூத்த தாமரை மலரில் அயோநிஜராய்,  ஐப்பசி திருவோணம் நட்சத்திரத்தில் தோன்றினார். தான் தரிசித்து மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய மங்கள ரூபத்தை கல்யாண குணத்தை பல்வேறு பாசுரங்களில் பதிவு செய்துள்ளார்.   இந்த பிரபந்தத்திற்கு முதல் திருவந்தாதி எனத் திருநாமம். 

முதலாழ்வார்கள் மூவரில்  பொய்கையாழ்வார், ஸ்ரீ மஹாவிஷ்ணு தரித்திருக்கின்ற பாஞ்சசன்யம் எனப்படும் சங்கின் அம்சமாவார். 







முதல் திருவந்தாதி 


          
   46

பண் புரிந்த நான்மறையோன்*  சென்னிப் பலி ஏற்ற,* 
வெண் புரி நூல் மார்பன் வினைதீர,* - புண் புரிந்த-
ஆகத்தான்*  தாள் பணிவார் கண்டீர்,*  அமரர் தம்- 
போகத்தால் பூமி ஆள்வார். 
2127  

          
   47

வாரி சுருக்கி*  மதக் களிறு  ஐந்தினையும்,* 
சேரி திரியாமல் செந்நிறீ இ,* - கூரிய-
மெய்ஞ்ஞானத்தால்*  உணர்வார் காண்பரே,* 
 மேல் ஒரு நாள- கைந்நாகம் காத்தான் கழல். 2128  

          
   48

கழல்ஒன்று எடுத்து*  ஒருகை சுற்றி ஓர் கைமேல்,* 
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச,* - அழலும்-
செருஆழி ஏந்தினான்*  சேவடிக்கே செல்ல,* 
மருவுஆழி நெஞ்சே! மகிழ்.  2129

          
   49

மகிழ் அலகு ஒன்றே போல்*  மாறும் பல் யாக்கை,* 
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால்,* - முகிழ் விரிந்த-
சோதி போல் தோன்றும்*  சுடர் பொன் நெடு முடி*  எம்- 
ஆதி காண்பார்க்கும் அரிது  2130
 
          
   50

அரிய புலன் ஐந்து அடக்கி*  ஆய் மலர் கொண்டு,*  ஆர்வம்- 
புரிய பரிசினால் புல்கில்,* - பெரியனாய்-
மாற்றாது*  வீற்றிருந்த மாவலிபால்,*  வண் கை நீர்- 
ஏற்றானைக் காண்பது எளிது.  2131
 
          

   51

எளிதில் இரண்டு அடியும்*  காண்பதற்கு,*  என் உள்ளம்- 
தெளிய தெளிந்து ஒழியும் செவ்வே,* - களியில்-
பொருந்தாதவனைப்*  பொரல்உற்று,*  அரியாய்- 
இருந்தான் திருநாமம் எண்.   2132
 
          
   52

எண்மர், பதினொருவர்*  ஈர்அறுவர் ஓர்இருவர்,* 
வண்ண மலர் ஏந்தி வைகலும்,* - நண்ணி-
ஒரு மாலையால் பரவி*  ஓவாது,*  எப்போதும்- 
திருமாலைக் கைதொழுவர் சென்று.    2133


          
   53

சென்றால் குடையாம்*  இருந்தால் சிங்காசனமாம்,* 
நின்றால் மரவடியாம் நீள் கடலுள்,* - என்றும்-
புணையாம் மணி விளக்காம்*  பூம்பட்டாம் புல்கும்- 
அணைஆம்,*  திருமாற்கு அரவு.  (2)  2134
          









பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா .....



அன்புடன்
அனுபிரேம் 💛💛💛


 

 

No comments:

Post a Comment