16 October 2023

ராஜராஜேஸ்வரியாக அன்னை மீனாட்சி....

  நவராத்திரி முதல்நாள் - 

மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி முதல் நாள்  அன்னை மீனாட்சி  ராஜராஜேஸ்வரியாக காட்சி தருகிறாள்.




பண்டாசுரனுக்கு, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவரால் மரணம் ஏற்படாது என சிவபெருமான்  வரம் அளித்தார்.

 பெண்ணின்றி குழந்தை பிறப்பது சாத்தியமில்லை என்பதால், தன்னை யாராலும் கொல்ல முடியாது என்று ஆணவம் கொண்டான் அசுரன். 

தேவர்களை துன்புறுத்தி அடிமைப்படுத்தினான். 

அசுரனுக்கு அடிமையான தேவர்கள் ஆங்கிரச முனிவரிடம் ஆலோசனை கேட்டனர். அவர் அம்பிகையை வழிபட்டு, யாகம் நடத்தும்படி கூறினார். 

யாகத்தீயிலிருந்து தாயின் சம்பந்தமின்றி, ராஜராஜேஸ்வரியாக அம்பிகை அவதரித்தாள். அசுரனை அழித்து மூவுலகிற்கும் தானே அதிபதி என நிலை நாட்டினாள். அந்த   ராஜராஜேஸ்வரி கோலத்தில்    இன்று அன்னை மீனாட்சி....





கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலுவிருப்பவளே “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி”






மதுராபுரி அம்பிகை மாலை  

- குலசேகர பாண்டியன் அருளியது - 


விநாயகர் காப்பு – கட்டளைக் கலித்துறை


நடக்கும் திரு விளையாட்டு ஓர் அறுபத்து நாலும் சொக்கர்

அடக்கும் தென் கூடலில் அம்பிகை மாலைக்கு அருவி மதத்,

தடக் கும்ப, கம்பச், சிறு கண், புகர் முகத்து, ஆல வட்டம்

முடக்கும் தடக்கை, ஒரு கோட்டு வாரணம் முன் நிற்கவே.


நூல்

திருவே! விளைந்த செந்தேனே! வடி இட்ட தெள் அமுதின்

உருவே! மடப் பிள்ளை ஓதிமமே! ஒற்றை ஆடகப் பூந்

தருவே! நின் தாமரைத் தாளே சரணம், சரணம் கண்டாய்,

அருவே! அணங்கு அரசே! மதுராபுரி அம்பிகையே! 1.


தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment