20 October 2023

5. அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில்....

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....






முன்னொரு காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாயிருந்த காட்சியைத் தனக்குக் காட்டுமாறு சிவனிடம் பார்வதி தேவி கேட்டார். 

அவ்வுருவைக் காண வேண்டுமானால் பார்வதி தேவி தவம் செய்ய வேண்டும் என்றார் சிவபெருமான்.

ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார்

கடும் தவம் செய்த அன்னைக்கு இடப்பாகம் சிவனாகவும், வலது பாகம் நாராயணனாகவும் காட்சி அளித்தார் சிவபெருமான். 

இன்று அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி  தருகிறாள்.











 மதுராபுரி அம்பிகை மாலை  

- குலசேகர பாண்டியன் அருளியது - 



மணியும், தரளமும், வெண் நகையோ? வழி மூவர் செயத்

துணியும், தொழிலும் உன் செய் தொழிலோ? பத்தித் துத்தி முடிப்

பணியும், சுடரும், கடல் ஏழும் நின் கழல் பங்கயத்தில்

அணியும் திரு உருவே! மதுராபுரி அம்பிகையே! 8.


செழும் துங்கக் கொங்கையும், முத்து ஆரமும், பொன் சிலம்பும், திங்கள்

கொழுந்தும், மகரக் குழையும் எல்லாம், வண்டு கொண்டு சுற்றி

உழும் தும்பை சூடும் திரு மேனியும், உன் உடலும் ஒன்றாய்

அழுந்தும் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே! 9.



தொடரும் ...


அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment