27 October 2023

6. மீனாட்சியம்மன் ஊஞ்சல் ஆடும் கோலத்தில்....

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.





மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி வைபவத்தில் அன்னை மீனாட்சி  இன்று ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். 

அருளாளரான குமர குருபரர் மீனாட்சி அம்மன் சந்நிதியில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றம் செய்தார். 

இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன.

 அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை ஊசல் பருவம் என்பர். அதுபோல, நவராத்திரியின் ஐந்தாம் நாளான அன்று , மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக மாறி ஊஞ்சலில் ஆடும் கோலத்தில்  காட்சியளிக்கிறார்.


ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

அம்மா மீனாட்சி ஆடுகவே!

நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்

நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!

ஆழிப்படுக்கை கொண்டவனின்

அருமைத் தங்கை ஆடுகவே!

உத்தமி பைரவி ஆடுகவே!

வழிபடும் எங்கள் வாழ்வினிலே

வழித்துணையாய் வந்து ஆடுகவே!










 மதுராபுரி அம்பிகை மாலை  

- குலசேகர பாண்டியன் அருளியது - 


கணையும், குமிழும், இணை நெடும் சாபமும், காரும், வள்ளைத்

துணையும், பவளமும், சோதி நிலாவும், துவண்ட பச்சைப்

பணையும், பனித் தடம் காந்தளும், பாந்தளும் பத்தும் ஒன்றாய்

அணையும் திரு உருவே! மதுராபுரி அம்பிகையே! 10.


இணங்கேன் ஒருவரை; நின் இரு தாள் அன்றி எப்பொழுதும்

வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன்; வஞ்ச நெஞ்சர் உடன்

பிணங்கேன் – அமுதம் பெருகும் செம் பாதிப் பிறை முடித்த

அணங்கே! சரணம் கண்டாய், மதுராபுரி அம்பிகையே! 11.



தொடரும் ...


அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment