1. நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை மீனாட்சி....
2. நவராத்திரி இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....
3. நவராத்திரி மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!
4. நவராத்திரி நான்காம் நாள் - கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...
5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....
6. . நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.
7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்
8. நவராத்திரி எட்டாம் நாள் -- அன்னை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ...
9. நவராத்திரி ஒன்பதாம் நாள் -- அன்னை மீனாட்சி சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.
மகிஷனை வதம் செய்து தீமையை அழித்தாலும் உயிர்க்கொலை செய்த பாவம், தேவிக்கு உண்டானது.
அதைப் போக்க அம்பிகை சிவனை பூஜித்தாள்.
மதுரையில் சுவாமியை விட அம்பிகையை உயர்ந்தவளாகக் காட்டுவதுண்டு. சுவாமிக்கு வலப்பக்கம் அம்பிகை இருப்பதால், அம்மனை முதலில் தரிசிப்பது மரபாக பின்பற்றப்படுகிறது.
குடும்ப வாழ்வில் கணவன், தன் மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, அவள் மீது அன்பு காட்டினால் கணவனை தெய்வமாக கருதுவாள் என்பதையும், கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையும் சிவபூஜை உணர்த்துகிறது.
- குலசேகர பாண்டியன் அருளியது -
மழைக் கொந்து அளக மடவார் தம் காதல் வலைத் தலைப்பட்டு
உழைக்கும் துயரம் ஒழிப்பது என்றோ? இரண்டு ஊசல் மணிக்
குழைக்கும் கலந்த பசுமை எலாம் குழை ஊடு நடந்து
அழைக்கும் கயல் விழியாய்! மதுராபுரி அம்பிகையே! 16.
இணைக் கும்ப மென் முலையார் விழி வேலுக்கும், எய்யு மதன்
கணைக்கும் தனி இலைக்கா விடவோ? மணிக் கச்சு அகலாத்
துணைக் கும்ப மென் முலையாய்! சொக்கர் மேனி துவளக் கட்டி
அணைக்கும் கமலம் உள்ளாய்! மதுராபுரி அம்பிகையே! 17.
தொடரும் ...
No comments:
Post a Comment