1. நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை மீனாட்சி....
2. நவராத்திரி இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....
3. நவராத்திரி மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!
4. நவராத்திரி நான்காம் நாள் - கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...
5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....
6. . நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.
7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்
8. நவராத்திரி எட்டாம் நாள் -- அன்னை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ...
மகிஷாசுரன் என்பவன் தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றான்.
இந்த வரத்தின் வலிமையால் தேவர்களைத் துன்புறுத்தினான்.
தேவர்கள் ஆதிபராசக்தியை சரணடைந்தனர்.
அம்பிகை, உக்கிர துர்க்கையாக மாறினாள். சிவன் தன் சூலாயுதத்தையும், விஷ்ணு சங்கு, சக்கரத்தையும் அம்பிகைக்கு வழங்கினர்.
சிங்க வாகனத்தின் மீது அமர்ந்த துர்க்கை, மகிஷாசுரனுடன் போரிட்டு வென்று ’மகிஷாசுரமர்த்தினி’ என்று பெயர் பெற்றாள்.
அந்த மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அன்னை மீனாட்சி...
மதுராபுரி அம்பிகை மாலை
- குலசேகர பாண்டியன் அருளியது -
விளையும் கருக் குழி வீழாமல், என் தன் வினைப் பிறவி
களையும் படிக்கும் கருது கண்டாய் – கழுநீரை வென்று
வளையும் தரள மணித் தோடு அழுத்திய வள்ளையைச் சென்று
அளையும் கயல் விழியாய்! மதுராபுரி அம்பிகையே! 14.
ஊடும் பொழுது உன் கருணை விடாமல் உவப்பதற்குக்
கூடும் தொழிலை மறப்பது உண்டோ? நறைக் கொன்றை அம் தார்
சூடும் தலைவர் திரு மார்பில், வாரி சொரி தரளம்
ஆடும் துணை முலையாய்! மதுராபுரி அம்பிகையே! 15.
தொடரும் ...
No comments:
Post a Comment