19 October 2023

4. கால் மாறி ஆடிய திருக்கோலத்தில் அன்னை ..



 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -   

   இராஜசேகர பாண்டிய மன்னனுக்காக மதுரை வெள்ளியம்பலத்தில் சிவகாமி அம்மன் சஹிதமாக நடராஜப்பெருமான் கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரம் !!!



இராசசேகர பாண்டியன் பரதக்கலையை கற்றுணர்ந்தவர்களிடம் பரதக்கலையைக் கற்க   தொடங்கினார்.  கற்கும் போது உடல்வலி ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்தார். வெள்ளியம்பலத்தில் தினமும் திருக்கூத்தினை நிகழ்த்தும் வெள்ளியம்பலவாணனுக்கும் உடல்வலியும், கால்வலியும், சோர்வும் ஏற்படுமே என்று எண்ணி மிக்க வருத்தம் கொண்டார். 

இறைவன் கால் மாறி ஆடினால் வலி நீங்குமே என்று கருதினார்.

 வெள்ளியம்பலவாணனிடம் “இறைவா, தாங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும், ஊன்றிய திருவடியைத் தூக்கியும் மாறி நடனமாட வேண்டும். அப்பொழுது தான் என்னுடைய வருத்தம் நீங்கும். அவ்வாறு செய்யாவிடில் நான் என்னை மாய்த்துக் கொள்வேன்” என்று மனமுருக வேண்டி தன் வாளினை நட்டு வைத்து அதில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்ள திட்டமிட்டார்.

இராசசேகர பாண்டியன் வாளில் பாயும் சமயம் வெள்ளியம்பலவாணர் இடது காலை தூக்கியும், வலது காலை ஊன்றியும் நடனமாடி இராசசேகரபாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார்.

வெள்ளியம்பலவாணன் கால் மாறி நடனம் ஆடியதைக் கண்டதும் இராசசேகர பாண்டியன் இறைவனை பலவாறு போற்றித் துதித்தார்.

பின் வெள்ளியம்பலவாணனிடம் “வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே, எக்காலத்துக்கும் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரமாகும்” என்று மனமுருக பிராத்தித்தார்.

அன்று முதல் இன்றைக்கும் வெள்ளியம்பலத்தில் கூத்தர் பெருமான் கால் மாறிய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார்.

 இன்று அன்னை மீனாட்சியை கால் மாறி ஆடிய திருக்கோலத்தை தரிசனம் செய்யலாம்.
















மதுராபுரி அம்பிகை மாலை  

- குலசேகர பாண்டியன் அருளியது - 


வடக் குன்ற மேருவும், மூது அண்டம் எட்டி வளைந்து புறம்

கிடக்கும் கடலும், புவனங்கள் ஏழும், கிளர் மருப்புத்

தடக் குஞ்சரம் எட்டும், எல்லாம் திரு உந்தித் தாமரையில்

அடக்கும் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே! 6.


ஒளி கொண்ட வெண் பிறைத் தோடும், பொன் ஓலையும், ஊறிய தேன்

துளி கொண்ட செங்கனி வாயும், முத்தாரமும், தோளும் என்றன்

களி கொண்ட நெஞ்சம் குடி கொண்டவா இசை கக்கு மணி

அளி கொண்ட பூங்குழலாய்! மதுராபுரி அம்பிகையே! 7.



தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment