28 October 2023

7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

7.  நவராத்திரி ஏழாம் நாள் -- அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.







எச்சதத்தன் பத்திரை தம்பதிகளுக்கு விசாரசருமர் என்ற மகன் இருந்தார். அவர் குருவில்லாமலேயே சிறந்த ஞானம் பெற்றார். அந்த ஞானத்தின் மூலமாக சிவபெருமானே முழுமுதற்கடவுளாக உணர்ந்தார். அன்று முதல் சிவபக்தியில் மூழ்கியிருந்தார். மணலால் சிவபெருமானுக்கு ஆலயம் மற்றும் மணலிங்கம் ஆகியவற்றை அமைத்து தினமும் வழிபட்டு வந்தார்.

இதையறிந்தோர் விசாரசருமானின் தந்தையான எச்சதத்தனிடம் முறையிட்டனர். 

ஆகமங்கள் துணையின்றி முறையற்ற ஒரு ஆலயம் அமைத்து அதில் தன் காலத்தினை மகன் செலவிடுகிறான் என்றெண்ணிய தந்தை விசாரசருமானின் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் சென்று அவனை சிவபக்தியில் ஈடுபட இயலாமல் தடுத்தார். 

அதனை பொருட்படுத்தாதிருந்த விசாரசருமானின் அபிசேக பொருட்களை கால்களால் உதைத்தார்.

 சிவபெருமானுக்கு அபிசேகம் செய்ய வைத்திருந்த பொருட்களை கால்களால் உதைத்தமையால் விசாரசருமார் தந்தை மீது கோபம் கொண்டார். 

ஆழ்ந்திருந்த சிவபக்தியால் ஒரு கொம்பினை எடுத்து அதனை மழுவாக(கோடாரி) மாற்றி தந்தையில் காலை வெட்டியெறிந்தார்.

சிவபெருமான் பார்வதி தம்பதியர் சமேதமாக தோன்றி எச்சதத்தனை மீட்டார். 

அதிதீவிர பக்தியுடைய விசாரசருமாரை தனது பக்தர்களில் தலைசிறந்தவராக அறிவித்து, சண்டேசுவரன் என்ற பட்டத்தினையும் அளித்தார்.












 மதுராபுரி அம்பிகை மாலை  

- குலசேகர பாண்டியன் அருளியது - 

 முலைக்கே அவசத் துயர் விளைப்பார் இன்ப மோகம் என்னும்

வலைக்கே அகப்பட்டு அழுந்தி விடாமல், வலிய வந்து என்

தலைக்கே பதம் வைத்த தண் அளியாய்! முத்தம் தத்து திரை

அலைக்கே விழி துயில்வாய்! மதுராபுரி அம்பிகையே! 12.


கொடிக் கொண்ட சிறு இடையார் மணி நூபுரம் கொஞ்சும் அடிப்

பொடிக் கொண்ட சென்னி உன் கால் வைக்குமோ? புற்று அரவெடுத்து

முடிக் கொண்ட சொக்கர் அழியா விரதம் முடிக்க என்றே,

அடிக் கொண்ட பூண் முலையாய்! மதுராபுரி அம்பிகையே! 13.


தொடரும் ...


அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment