1. நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை மீனாட்சி....
2. நவராத்திரி இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....
3. நவராத்திரி மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!
ஏகபாத மூர்த்தி ருத்ரன்,மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஐந்து மூர்த்திகளும் ஒடுங்கி, ஒரே உருவத்தில் காட்சியளிப்பதே இந்த மூர்த்தி.
ஊழிக்காலம் எனப்படும் பிரளய காலத்தில், இந்த உலகமே நீரில் மூழ்கி அழியும். அப்போது உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையவளாகிய சக்திதேவியும் கூட இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கிவிடுவார்கள்.
ஊழிக்காலத்தில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என்று வேதங்கள் சொல்கின்றன.
அனைத்து சக்திகளின் பிறப்பிடமாவும், அனைத்து உயிர்களும் தஞ்சமடையும் இடமாகவும் இந்த ஏகபாத மூர்த்தி இருக்கிறார்.
நான்கு கரங்களுடன், மூன்று கண்கள் கொண்டவராய், ஒரு பாதத்தில் நின்ற கோலத்தில் அருளும் வடிவம் இவருடையது.
ஒற்றைக் காலில் நிற்கும் சிவபெருமானுடைய இடுப்பின் வலது பக்கம் பிரம்மதேவனும், இடதுபக்கம் மகாவிஷ்ணுவும் காட்சி தருகின்றனர்.
சிவபெருமானின் ஒற்றைக் கால், இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் தூணாகக் கருதப்படுகிறது.
வலது கை அபய முத்திரை காட்டியபடி இருக்க, இடது கை வரத முத்திரை காட்டுகிறது.
பின் இரு கரங்களிலும் மான் மற்றும் மழு தாங்கி அருளும் இந்த மூர்த்தியே, 'ஏகபாதர் மூர்த்தி திருக்கோலம்.
அன்னை மீனாட்சியை ஏக பாத மூர்த்தி திருக்கோலத்தை தரிசனம்செய்தால் முப்பிணிகள் நீங்கி, நீள் ஆயுள் பெறலாம்.
மதுராபுரி அம்பிகை மாலை
- குலசேகர பாண்டியன் அருளியது -
குன்றே எனும் முலையார் தரும் காதல் கொடுமை எல்லாம்
வென்றேன், மறலியை விட்டு விட்டேன், விரைத் தாமரைத் தாள்
என்றே என் சென்னி வைத்தாய், பின்னை யான் செய்யும் ஏவல் எல்லாம்
அன்றே உன் ஏவல் கண்டாய், மதுராபுரி அம்பிகையே! 4.
வடி வைத்த வேல் விழியார் அநுராக மயக்கில் சென்று
குடி வைத்த நெஞ்சு என்று மீளும் கொலோ! அன்பு கொண்ட தொண்டர்
முடி வைத்தவாறு, என் புலைத் தலை மேல் வைத்த முத்தின் தண்டை
அடி வைத்த பேர் இன்பமே! மதுராபுரி அம்பிகையே! 5.
No comments:
Post a Comment