25 October 2023

ஸ்ரீ பேயாழ்வார்

  ஸ்ரீ பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...  ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...






  பேயாழ்வார் வாழி திருநாமம்!

திருக்கண்டேன் என நூறும்  செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே

மறுக்கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே

மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே

நெருங்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே 







பிறந்த ஊர் -  மயிலாப்பூர்

பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு

நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)

கிழமை      - வியாழன்

எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி

பாடல்கள் -100

சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)


தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.


திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்

 *வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,

*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற

திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.






          

மூன்றாம் திருவந்தாதி

   46

மலை முகடு மேல் வைத்து*  வாசுகியைச் சுற்றி,* 
தலை முகடு தான் ஒரு கை பற்றி,*- அலைமுகட்டு  
அண்டம் போய் நீர்தெறிப்ப*  அன்று கடல் கடைந்தான்,* 
பிண்டமாய் நின்ற பிரான்.

2327
          

   47

நின்ற பெருமானே!*  நீர்ஏற்று,*  உலகு எல்லாம்
சென்ற பெருமானே!*  செங்கண்ணா,* - அன்று
துரக வாய் கீண்ட*  துழாய் முடியாய்,*  நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ. 

2328

          

   48

நீ அன்றே நீர்ஏற்று*  உலகம் அடி அளந்தாய்,*
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்* - நீ அன்றே
மா வாய் உரம் பிளந்து*  மா மருதின் ஊடு போய்,* 
தேவாசுரம் பொருதாய் செற்று?

2329

          

   49

செற்றதுவும்*  சேரா இரணியனை*  சென்று ஏற்றுப்
பெற்றதுவும்*  மா நிலம், பின்னைக்கு ஆய்* - முற்றல்
முரி ஏற்றின்*  முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய்,*  மூரிச்
சுரி ஏறு*  சங்கினாய்! சூழ்ந்து    

2330

          

   50

சூழ்ந்த துழாய்அலங்கல்*  சோதி மணி முடி மால்,*
தாழ்ந்த அருவித் தடவரை வாய்,* - ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த*  மா முதலை கொன்றான்,* 
அணி நீல வண்ணத்தவன்.

2331  

          

   51

அவனே அரு வரையால்*  ஆநிரைகள் காத்தான்,* 
அவனே அணி மருதம் சாய்த்தான்,* - அவனே
கலங்காப் பெரு நகரம்*  காட்டுவான் கண்டீர்,* 
இலங்கா புரம் எரித்தான் எய்து. 

2332

          

   52

எய்தான் மராமரம்*  ஏழும் இராமனாய்,* 
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய்,* - எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ*  சென்று குறள் உருஆய்*
முன் நிலம் கைக் கொண்டான் முயன்று.   

2333

          

   53

முயன்று  தொழு நெஞ்சே!*  மூரி நீர் வேலை,*
இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால்,* - பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து*  மாயக் குழவியாய்,* 
தண் அலங்கல் மாலையான் தாள்.

2334












பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணாய  நமக ....



அன்புடன்
அனுபிரேம் 💚💚💚💚


No comments:

Post a Comment