31 October 2023

10. மீனாட்சி அம்மன் சடையலம்புதல் உற்சவம் -

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்

 8.  நவராத்திரி எட்டாம் நாள் --  அன்னை  மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ...

9. நவராத்திரி ஓன்பதாம் நாள் --  அன்னை  மீனாட்சி  சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். 

10. நவராத்திரி பத்தாம் நாள் திருவிழா  மீனாட்சி அம்மன் சடை அலம்பல் உற்சவம் --- மகிஷாசுரனை வதம் செய்த அன்னை தன் கூந்தலை பொற்றாமரை குளத்தில் அலசி சுந்தரேஸ்வரர் இருப்பிடம் சேர்த்தியாகிறார்.








 மதுராபுரி அம்பிகை மாலை  

- குலசேகர பாண்டியன் அருளியது - 



நும் கேள்வர் பாகத்தும், அந் நான் மறை எனும் நூல் இடத்தும்,

கொங்கு ஏய் பொகுட்டுக் கமல ஆலயத்தும், குடி கொண்ட நீ

எங்கே இருக்கினும் நாய் அடியேனுக்கு இடர் வரும் போது

அங்கே வெளிப்படுவாய்! மதுராபுரி அம்பிகையே! 18.


பொன்னே! நவ மணியே! அமுதே! புவி பூத்து அடங்கா

மின்னே! ஒளி உற்ற மெய் பொருளே! கரு மேதியின் மேல்

எந் நேரம் காலன் வந்து ஆவி விட்டாலும், எனக்கு அஞ்சேல் என்று

அந் நேரம் வந்து அருள்வாய்! மதுராபுரி அம்பிகையே! 19.


மீனாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ...


எந் நேரம் காலன் வந்து ஆவி விட்டாலும், 

எனக்கு அஞ்சேல் என்று 

அந் நேரம் வந்து அருள்வாய்!  

மதுராபுரி அம்பிகையே!





அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment