11 November 2019

ஸ்ரீ கள்ளழகரின் தைலக்காப்பு மற்றும் தொட்டி திருமஞ்சனம்

ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்.


ஸ்ரீ கள்ளழகரின்  தைலக்காப்பு  திருவிழா மற்றும் தொட்டி திருமஞ்சனம் -( 09-11-19)






 தைலக்காப்பு திருவிழாவையொட்டி கள்ளழகர் பெருமாள் கீழே கோவிலில் இருந்து  புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவார்.

தொடர்ந்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில்   மலை அடிவாரத்திலிருந்து புறப்படுவார். கோவில் யானை முன்னே செல்ல மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் மலை ஏறுவார்.

அதனை அடுத்து மலைப்பாதையில் சென்று மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை மாதவி மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு மதியம்  கள்ளழகர் பெருமாளுக்கு சம்மங்கி, சந்தனாரி, திருத்தைலங்கள் சாத்தப்பெறும். தொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடுவார். பின்பு மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

மாலையில் பல்லக்கில்  வந்த வழியாக சென்று அழகர் கோவிலில் இருப்பிடம் சேருவார்.

































அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், மதுரை 

நூபுர கங்கை தீர்த்தம் ,ராக்காயி கோவில், மதுரை 


திருவாய்மொழி - இரண்டாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி – கிளரொளி 


2886

கிளரொளியிளமை கெடுவதன்முன்னம் * 
வளரொளிமாயோன் மருவியகோயில் * 
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை * 
தளர்விலராகில் சார்வதுசதிரே. (2)


2887

சதிரிளமடவார் தாழ்ச்சியைமதியாது * 
அதிர்குரல்சங்கத்து அழகர்தம்கோயில் * 
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை * 
பதியதுஏத்தி எழுவதுபயனே.


2888

பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே * 
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் * 
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை * 
அயன்மலையடைவது அதுகருமமே.



மிக அழகிய  தைலக்காப்பு மற்றும்   தொட்டி திருமஞ்சனம் படங்களை முகநூலில் பதிவிட்ட பக்தர்களுக்கு நன்றிகள் பல ..

அன்புடன்
அனுபிரேம் 

3 comments:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான பகிர்வு. தங்கள் பதிவு மூலம் கள்ளழகரின் தைலக்காப்பு உற்சவ விழாவை தரிசித்துக் கொண்டேன். படங்கள் அருமை. பெருமானின் புன்னகை தவழும் முகம் கண்டு மெய்மறந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா கண்டேன்.
    படங்கள், பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete