வாழ்க வளமுடன்
ராஜ முடி அணிந்துக்கொண்டு நிஜமாகவே , இளவரசன் போல நடந்து செல்கிறார் டெல்லியிலிருந்து இராமானுர் கூப்பிடக்குரலுக்காக ஒடி வந்த இராமப்பிரியர் .
ஐப்பசி மாத சுக்லபட்ச தசமி திதியன்று அஷ்டதீர்த்த உற்சவத்தை நடத்துகின்றனர் இத்தலத்தில் . அப்பொழுது சடாரி திருமஞ்சனம் நடைபெறும்.. பின் சடாரி மட்டும் காடு மலைகள் என நடந்து 8 தீர்த்தங்களில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இது மொத்தம் 18 கிலோமீட்டர் தூர பயணம்..
இதில் குழந்தை பேரு வேண்டி பலர் கலந்துக் கொள்கின்றனர்.
குழந்தையில்லாதவர்கள் விரதம் மேற்கொண்டு குளக்கரையில், ஒரு தேங்காய், வாழைப் பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சுமங்கலி கையால் பெற்றுக் கொண்டு, அதைத் தங்கள் புடவைத் தலைப்பில் இறுக முடிந்து கொண்டு சடாரி தீர்த்தமாடிய பின் கல்யாணி புஷ்கரணியில் நீராடுகின்றனர்.
விரதமிருக்கும் பெண்கள் பின் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தங்கள் மடியில் கட்டியுள்ளவற்றுடன் நீராடுகின்றனர்.
இப்படி அஷ்ட தீர்த்தங்களில் சடாரி நீராட்டம் முடிந்தபின், தொட்டில் மடுவிற்கு சடாரியை எழுந்தருளச் செய்து திரு ஆராதனம் செய்தபின், பெருமாள் பிரசாதமாக கதம்பமும் தயிர்சாதமும் பக்தர்களுக்குத் தருவார்கள்.
பிரசாதம் வழங்கியபின் சடாரியுடன் அனைவரும் இரண்டரை மணி நேரத்தில் திருநாராயணமலையை வலம் வருவார்கள். பின் சடாரியை கோவிலுக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள்.
விரதப் பெண்கள் நேரே மலைமீதுள்ள யோக நரசிம்மர் சந்நிதிக்குச் சென்று தன் மடியில் உள்ளவற்றைத் தட்டில் வைத்து அர்ச்சகர் மூலம் மூலவரிடம் சேர்ப்பித்து, பின் எம்பெருமாளைச் சேவித்து விட்டு வருகிறார்கள் .
அனைத்து தீர்த்தங்களின் பெயரும் சரியாக தெரியவில்லை . அதனால் குறிப்பிடவில்லை. வயல்களுக்கு நடுவே காட்டிற்கு உள்ளே என பல கி. மீ பயணம் ...சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வருகின்றனர் .
செல்லும் வழி |
அப்பாவின் பார்வையாக கடந்த வாரம் மேல்கோட்டையில் நடைபெற்ற ராஜமுடி சேவையும் , அஷ்ட தீர்த்த உற்சவமும் இன்றைய பதிவில் ....
முந்தைய பயணத்தில் பகிர்ந்தவை ...
மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயணர் வைரமுடி சேவை
1 .மேல்கோட்டை பயணம்
2 .திருநாராயணபுரம் - செல்லுவ நாராயண சுவாமி
3.செல்ல பிள்ளை - வைரமுடி சேவை ...
4.சுவாமி ராமானுஜரின் - தமர் உகந்த திருமேனி ..
5.மலைமேல் யோக நரசிம்மர் ஆலயம் ..
6. தொண்டனூர் கெரே -ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில் , வேணுகோபால சுவாமி கோவில்......
7. சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்..
8. தொண்டனூர் ஏரி ..
7. சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்..
8. தொண்டனூர் ஏரி ..
பெரிய திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி – அங்கண்ஞாலம - 4
1011
எவ்வம்வெவ்வேல் பொன்பெயரோன் ஏதலனின்னுயிரை
வவ்வி * ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் *
கவ்வுநாயும்கழுகும் உச்சிப்போதொடுகால்சுழன்று *
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
1012
மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்கோளரியாய் * அவுணன்
பொன்றஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் *
நின்றசெந்தீமொண்டுகுறை நீள்விசும்பூடிரிய *
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே.
அன்புடன்
அனுபிரேம்
No comments:
Post a Comment