மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயணர் வைரமுடி சேவை (17/03/2019)
மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் 'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது. சுவாமி இராமானுஜர் சந்நிதிக்கு முன் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா நடைபெறுகின்றது .
அவ்விழாவின் மிக அழகிய காட்சிகள் இன்று ...
இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு சுவாமி இராமானுஜருக்கு கிடைத்தது.
வைர முடி சேவை பங்குனி மாதப் பூச நட்சத்திரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.
இந்த வைரமுடி என்ற வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மாண்டியா மாவட்டத்தின் கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வந்து இங்கு சேர்ப்பார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இந்த கிரீடம் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை அணிந்து கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார் சம்பத குமாரர். தாயார்களுடன் பெருமாள் கருட சேவை சாதிப்பது இங்கு ஒரு தனி சிறப்பு.
எல்லாத் திசைகளிலும் பெருமாளை அழைத்து செல்கிறார்கள். விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழற்றப்பட்டு ... பிறகு ராஜ முடி அணிந்து சேவை சாதிக்கின்றார் செல்லப்பிள்ளை.
நேரில் சென்றாலும் இத்தகைய தரிசனம் கிடைப்பது எளிது அல்ல, ...இத்தகைய தெளிவான படங்களை முக நூலில் பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.
881.
நாட்டினான் தெய்வம் எங்கும்* நல்லதோர் அருள் தன்னாலே.*
காட்டினான் திருவரங்கம்* உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,*
கேட்டிரே நம்பிமீர்காள்!* கெருட வாகனனும் நிற்க,*
சேட்டை தன் மடியகத்துச்* செல்வம் பார்த்து இருக்கின்றீரே.
882.
ஒருவில்லால் ஓங்கு முந்நீர்* அனைத்து உலகங்கள் உய்ய,*
செருவிலே அரக்கர் கோனைச்* செற்ற நம் சேவகனார்,*
மருவிய பெரிய கோயில்* மதில் திருவரங்கம் என்னா,*
கருவிலே திருவிலாதீர்!* காலத்தைக் கழிக்கின்றீரே.
அன்புடன்
அனுபிரேம்
படங்களும் தகவல்களும் வெகு அருமை.
ReplyDeleteமேல்கோட்டை ஒரே ஒரு முறை போயிருக்கிறேன்.
கீதா
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்ய என்பதுதான் சரியல்லவா? 'அடைத்து' என்று எழுதியிருகிறீர்களே...
ReplyDeleteநன்றி ..மாற்றிவிட்டேன்
Deleteஅழகான தரிசனம் .
ReplyDeleteநேரில் பார்த்த உணர்வு.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
படங்கள் மூலம் நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம். நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteவைர முடி அணிவித்த பெருமாள் படங்கள் மிக அழகு. அழகான படங்களால் நல்ல தரிசனம் கிடைக்க பெற்றதில் மிகவும் மகிழ்வடைந்தேன் . தங்கள் பதிவினால் நேரிலேயே சென்று பார்த்தது போன்ற உணர்வும் வரப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.