06 March 2019

கறுப்பு கொண்டைக்கடலை கட்லெட் / சன்னா டிக்கி

கறுப்பு கொண்டைக்கடலை கட்லெட் / சன்னா டிக்கி






தேவையானவை

கறுப்பு கொண்டைக்கடலை - 1 கப்

பெரிய வெங்காயம் -  1 

இஞ்சி , பூண்டு விழுது  - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் -  1  ஸ்பூன்
கடலை மாவு      - 2 ஸ்பூன்
சோள மாவு           - 1 ஸ்பூன்

மல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் 
உப்பு


செய்முறை 



கறுப்பு கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . அதனுடன்   இஞ்சி, பூண்டு விழுது,   ( இந்த விழுதுடன் நான் மிளகாயும் சேர்த்து அரைத்து இருப்பதால் அது சிவப்பு நிறத்தில் உள்ளது) வெங்காயம் , கொத்தமல்லி தலை , சிறிது உப்பும் சேர்த்து அரைக்கவும் .


   




அரைத்த கலவையில்  கடலை மாவு , சோள மாவு ,உப்பு  சேர்த்துப் பிசையவும் .


 




பின் அவைகளை வட்டமாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்க, சுவையான கறுப்பு கொண்டைக்கடலை கட்லெட்  / சன்னா டிக்கி  தயார் .












சில நேரம் சுண்டல் மீந்து போனால் , இவ்வாறு செய்ய நொடியில் தீர்ந்துவிடும் . நீங்களும் செய்து பார்த்து கூறுங்கள் ....






அன்புடன்
அனுபிரேம்









6 comments:

  1. படங்களே ஆசையை தூண்டுகிறது.

    ReplyDelete
  2. படங்களுடன் அருமையான சமையல் குறிப்பு.
    காணொளியும் அருமை.

    ReplyDelete
  3. நல்லதொரு பயனுள்ள குறிப்பு அனு.

    ReplyDelete
  4. சுவையாய் இருக்கும் போலிருக்கிறதே...

    கட்லெட் போலில்லாமல், தட்டையைப் போலிருக்கிறதே...

    ReplyDelete
  5. நல்லாத்தான் இருக்கு, வடையை இன்னொரு விதமாக சொல்லுறீங்க போலும். நான் கடலை கெளபி யில் எல்லாம் இப்படி வடை சுடுவேன்.. இஞ்சியை பேஸ்ட் ஆகப் போடாமல் குட்டியாக கட் பண்ணிப் போடுவேன்.

    ReplyDelete
  6. ஹெல்தி கட்லெட்

    ReplyDelete