20 March 2019

ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை

ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் உறையூர் ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன்  நடைபெற்ற சேர்த்தி  சேவை ( 18. 3. 2019) .....























கமலவல்லி நாச்சியாருக்கு சாற்றியஏலக்காய் ஜடை பட்டை










பெருமாள்   தாயார் பதக்கமும்,  தாயார் பெருமாள் பதக்கமும் அணிந்துள்ளனர் .

இந்த சேர்த்தியில்  நம் பெருமாள் தன் மாலையை தாயாருக்கு கொடுத்து , தாயார் மாலையை அணிந்துக் கொள்வார் .

பெருமாள் இரவு நேரத்தில் புறப்பாடு செய்ய இருப்பதால் பவழ மாலையில் தாயத்து..











 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறையூரில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்த்தி கண்டருளிய படங்களை பதிவிட்ட திரு.விஜயராகவன் கிருஷ்ணன் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மிகவும் நன்றி



667.   
அல்லி மா மலர்-மங்கை நாதன்*  அரங்கன் மெய்யடியார்கள் தம்*

எல்லை இல் அடிமைத் திறத்தினில்*  என்றும் மேவு மனத்தனாம்* 

கொல்லி-காவலன் கூடல்-நாயகன்*  கோழிக்கோன் குலசேகரன்*

சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்*  தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)


    
1762.   

கோழியும் கூடலும் கோயில் கொண்ட*  கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*

பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்*  மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி*  அச்சோ ஒருவர் அழகியவா!   




அன்புடன்
அனுபிரேம்





7 comments:

  1. அழகிய தரிசனம் கண்டேன்.

    ReplyDelete
  2. கமலவல்லி தாயார், பெருமாள் படங்கள் அழகு.

    கமலவல்லி நாச்சியாருக்கு சாற்றியஏலக்காய் ஜடை பட்டையில் கடைசியில் மனோரஞ்சிதமும் வைத்து இருப்பது மிக அழகாய் இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. படங்கள் அத்தனையும் அழகு.

    விஜராகவன் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துகள் அழகான ஃபோட்டோக்ராஃபி!

    கீதா

    ReplyDelete
  4. அழகான படங்கள். தலைநகரில் இருந்தபடியே சேர்த்தி பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. படங்கள் அத்தனையும் அழகு. ஏலக்காய் ஜடை அலங்காரம் சூப்பரா இருக்கு. கடைசி படம் அழகோ அழகு.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள்.. அருமையாக பெருமாளின் தரிசனம் கண்டு மனம் மகிழ்ந்தேன். கமலவல்லி தாயாரின் ஏலக்காய் ஜடையலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது. கண் குளிர படங்களுடன், அருமையான பதிவும் தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. நல்ல தரிசனம். நம்பெருமாளின் (பல உற்சவ மூர்த்திகளில்) நெற்றியை மறைத்தவாறு இருக்கும் சுட்டி என்னது? அதன் தாத்பர்யம் தெரியுமா? (கஸ்தூரி திலகம் என்று சொல்கிறார்கள். அதன் முக்கியத்துவம் என்ன?)

    ReplyDelete