08 March 2019

பெண்மையை பேணுவோம்

பெண்மையை பேணுவோம் 







நம் எண்ணங்களில் ,செயலில்  முதலில் பெண்மையைப் பேணுவோம்..
ஆம் பெண்களாகிய நாம் முதலில் நம்மைப் போற்றுவோம் , பேணுவோம் ...

பின் அனைவரும் அதைப் பின் தொடர்வார்கள்....

போன தலைமுறையிலிருந்த அடக்கு முறை இன்று இல்லை. ஆனால் இன்னும் பலரும்  மாற வேண்டும்.

பெண்மையைப்  பற்றிப் பேசும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது...நாணயத்தின் இரு பக்கம் போல...பெண்மை பேசி நம்மைச் சிறுமைப் படுத்தும் நிகழ்வுகளும் இப்பொழுது நடக்கின்றன..

பேசி பேசி எதுவும் சாதிக்க இயலாது..செயலில் வேண்டும்...

பெண்மையின் அடிப்படை உயரிய குணமே அன்பு தான்...

அதை என்றும் மனதில் பதிக்க வேண்டும் அதற்காக ..

அடிமையாய் இரு என கூறவில்லை விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்கிறேன்...

நமது பலமே குடும்ப அமைப்பு தான்...அதை வலுப்படுத்த வேண்டும்..நம் எதிர்கால  மக்களுக்கு அதை உணர்த்த வேண்டும்...

இந்த ஒரு மாதம் மட்டும் இதைப் பேசி பயன் இல்லை எனினும் இன்றாவது  இதைப் பேசி மனத்தில்  பதித்து நடக்க வேண்டும்...


அதற்கு முதலில் ...

நம்மை நாமே போற்ற வேண்டும்...
நம்மை நாமே மதிக்க வேண்டும்....
நம்மை நாமே உயர்த்த வேண்டும்....
நம்மை நாமே  பேண வேண்டும்...
நம்மை நாமே மகிழ்விக்க வேண்டும்....

அனைத்து செயல்களையும்  முதலில்  நம்மில் ஆரம்பிப்போம் ...

அதைக் கண்டு ..அனைவரும்  தொடர்வார்கள்...அன்பு என்றும் எங்கும் ஆளட்டும்...



பெண் விடுலை


 விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.

உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?

திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்

சிறுமை தீரநந் தாய்ததிரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.

விடியும் நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு, தாம் முதல் என்றன ரன்றே?

அடியோ டநத் வழக்கத்தைக் கொன்றே,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்விர்நந் தேசத்து வீரக்
காரி கைக்கணத் தீர்,துணி வுற்றே.
- பாரதியார்



பெண் கல்வி

பெண்களால் முன்னேறக் கூடும்-நம்
வண்தமிழ் நாடும் எந் நாடும்!
கண்களால் வழிகாண முடிவதைப் போலே!
கால்களால் முன்னேற முடிவதைப் போலே!
பெண்ணிகளால் முன்னேறக் கூடும்!

படியாத பெண்ணினால் தீமை!-என்ன 
பயன்விளைப் பாளந்த ஊமை?
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி,-நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!
பெண்ணிகளால் முன்னேறக் கூடும்!

பெற்றநல் தந்தைதாய் மாரே,-நும்
பெண்களைக் கற்கவைப் பீரே! 
இற்றைநாள் பெண் கல்வியாலே,-முன்
னேறவேண் டும் வைய மேலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!

-பாரதிதாசன்




அன்புடன்
அனுபிரேம்



8 comments:

  1. பாரதியின் வரிகளை நினைவுகூர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  2. இனிய மகளிதின நல்வாழ்த்துக்கள் அனு.
    இன்றைய தினத்துக்கேற்ற நல்லதொரு பதிவு, அழகிய பாரதி வரிகளோடு..

    ReplyDelete
  3. அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள் சகோ இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. பெண்மை போற்றுவோம்
    மகளிர் தின நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. குரு-சிஷ்யன் இருவர் கவிதை வரிகளைக் கொணர்ந்தது சிறப்பு. மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நம்மை நாமே போற்ற வேண்டும்...
    நம்மை நாமே மதிக்க வேண்டும்....
    நம்மை நாமே உயர்த்த வேண்டும்....
    நம்மை நாமே பேண வேண்டும்...
    நம்மை நாமே மகிழ்விக்க வேண்டும்....//

    அருமை.
    மகளிர்தின வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  8. பெண்மை போற்றுவோம்....

    மகளிர் தின சிறப்புப் பகிர்வு சிறப்பாக இருக்கிறது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete