23 March 2019

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பங்குனி தேரோட்டம்


ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பங்குனி கோரதத்தில்  ( 22 .03 .19)  ...




























892

பணிவினால் மனமதுஒன்றிப்*  பவளவாய் அரங்கனார்க்குத்,*

துணிவினால் வாழமாட்டாத்*  தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*

அணியினார் செம்பொன்னாய*  அருவரை அனைய கோயில்,* 

மணியனார் கிடந்தவாற்றை*  மனத்தினால் நினைக்கலாமே? 




893
பேசிற்றே பேசல் அல்லால்*  பெருமை ஒன்று உணரலாகாது,* 

ஆசற்றார் தங்கட்குஅல்லால்*  அறியலா வானுமல்லன்,*

மாசற்றார் மனத்துளானை*  வணங்கி நாம் இருப்பதல்லால்,* 

பேசத்தான் ஆவதுண்டோ?*  பேதை நெஞ்சே!நீ சொல்லாய். 



894
கங்கையிற் புனித மாய*  காவிரி நடுவு பாட்டு,*

பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழி லரங்கந் தன்னுள்,*


எங்கள்மா லிறைவ னீசன்*  கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*

எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையே னேழை யேனே!





ஸ்ரீரங்கம் பங்குனி தேரோட்ட படங்களை முக நூலில் பதிவிட்ட  பக்தர்களுக்கு மிகவும் நன்றி...



அன்புடன்
அனுபிரேம்

10 comments:

  1. பெருமாளின் அழகிற்கு நிகரேது?

    ReplyDelete
  2. திருவரங்கத்தில் இருந்தால் நிச்சயம் கேமராவும் கையுமாக தேரோட்டம் பார்க்கச் சென்று இருப்பேன்.....

    உங்கள் மூலம் படங்கள் பார்க்கக் கிடைத்தது. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ஜி! அனுவின் சமீபத்திய ஸ்ரீரங்கம் படங்கள் + இந்தத் தேரோட்டம் படங்கள் பார்த்ததும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். வெங்கட்ஜி இருந்திருந்தால் கேமராவுடன் சுற்றியிருப்பார் என்று. இந்தப் படங்களில் இருக்கும் கூட்டத்தில் கூட எங்கேயாவது வந்திருப்பீங்க!! ஹா ஹா ஹா ஆ

      கீதா

      Delete
  3. வணக்கம் சகோதரி

    ஸ்ரீரங்கம் பங்குனி தேரோட்ட படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. சூரிய ஒளியுடன் போட்டியாக அற்புதமாக ஜொலிக்கும் படம் மிக மிக அழகாக உள்ளது. தேரும் மிக அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்துடன் ரங்கனின் கண் நிறைந்த காட்சிகள். ஸ்ரீரங்கநாதரின் தேரோட்ட தரிசனங்களை தரிசித்துக் கொண்டேன். அவனருள் அனைவருக்கும் கிடைக்க மனதாற பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. தேரோட்டப்படங்கள் அருமை.

    டாத்* தொல்லை - 'த்' கூடாது. மணியனார்-மணியினார் என்று வரணும். வானும்மல்லன் - வானுமல்லன் அல்லது வானும் அல்லன் என்று வரணும். கங்கயிற் - கங்கையில்/ற் கங்கை என்பது நதி.

    தொடர்ந்து பாசுரங்களை இடுகைல எழுதுங்க. நான் தவறு காண்பதால் (தட்டச்சில்), டிஸ்கரேஜ் ஆகாதீங்க.

    ReplyDelete
    Replies

    1. இதில் வானும்மல்லன் - வானுமல்லன், கங்கயிற் - கங்கையில்/ற் மட்டுமே நீங்கள் கூறிய படி பிழை மற்றவை எல்லாம் சரியாகவே உள்ளன ...

      தவறு வர கூடாது என இரு முறை சரி செய்தே பதிவிட்டேன் இருப்பினும் பிழை வந்துவிட்டது ...மாற்றி விடுகிறேன்


      வழிகாட்டுதலுக்கு நன்றி

      Delete
  5. படங்கள் அனைத்தும் அழகு. அதிலும் அந்த 7வது புகைப்படம் அருமை.

    ReplyDelete
  6. படங்கள் எல்லாமே நல்லாருக்கு அனு.

    கீதா

    ReplyDelete
  7. புண்ணியம் பெற்றேன். படங்கள் அருமை

    ReplyDelete
  8. பங்குனி தேரோட்ட படங்கள் அனைத்து அழகு அனு. ஶ்ரீரங்கநாதரையும் தரிசித்தாயிற்று உங்க பதிவினால்..

    ReplyDelete