26 March 2019

நீர் தோசை

வாழ்க வளமுடன்...

உடுப்பி  மங்களூர் ஸ்பெஷல் நீர்  தோசை  இன்றைய பதிவில் ...






தேவையானவை

பச்சரிசி - 2 கப் 

தேங்காய் - 1 கப் 

 உப்பு 

 எண்ணெய் 




செய்முறை

 அரிசியை இரண்டு மணிநேரம் ஊற வைத்து ,  பின்னர் கிரைண்டரில் அரிசி, தேங்காய் ,உப்பு  மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.


.



நன்கு நீர்க்க உள்ள மாவை  வட்டமாக ஊற்றி மூடி வைத்து வேகவிட்டு எடுக்க வேண்டும் . நான் ஆப்ப கடாயில் ஊற்றி எடுத்தேன் .

புளிக்க விட வேண்டியது இல்லை. இந்த மாவை ஆட்டிய உடனே  தோசை செய்யலாம் .



தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் , தேங்காய் சேர்த்து அரைத்து  இருப்பதால் பசங்களுக்கு அப்படியே சாப்பிடவே ரொம்ப பிடித்து இருந்தது.

 அம்மா செய்யும் அரிசி ரொட்டி தடிமனாக  இருக்கும், இந்த தோசை அந்த ரொட்டி சுவையுடன் மெல்லியதாக இருந்தது .





சாப்பிட ஒரு எளிமையான உணவு இந்த நீர் தோசை  ...


அன்புடன்
அனுபிரேம் 


7 comments:

  1. ஈசியான, சுவையான ரெசிப்பி. செய்துபார்க்கிறேன் அனு.

    ReplyDelete
  2. நாங்களும் இப்படி செய்வோம்.
    அருமையாக இருக்கிறது படமும், காணொளியும்.

    ReplyDelete
  3. எங்க வீட்டுல அடிக்கடி செய்வது அதுவும் பிறந்த வீட்டுல...இதே யும் இதை ஆட்டி எடுத்தவுடன் அந்த நீர் வைத்து கொஞ்சம் கஞ்சி போலக் காய்ச்சி மாவுடன் கலந்து விட்டு வார்ப்பது. களிக்கஞ்சி தோசை என்போம் .... அரைத்த உடனேயே வார்க்கலாம்...

    எங்கள் வீட்டில் மிகவும் பிடித்த தோசை..இது

    கீதா

    ReplyDelete
  4. உங்க படம் சூப்பர் அனு! காணொளியும்

    கீதா

    ReplyDelete
  5. படமும் செய்முறையும் நல்லா இருக்கும். இதுக்கு எந்தவித தேங்காய் சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும். விரைவில் செய்வேன்.

    ReplyDelete