29 March 2019

நதியின் ஓட்டம்

வாழ்க வளமுடன் 


 நதியின் ஓட்டம் 



( இப்படத்திற்கான ஒரு சிறுகதை  முயற்சி )






தாத்தா...தாத்தா…எந்ததிரிங்க 


எங்க உங்க பை...  நீங்க இன்னும் எடுத்து வைக்கலையா…


தாத்தா...

நான் வரலடா..  நீங்க போயிட்டு வாங்க…

 அப்பா அப்பா...  இங்க பாருங்க இந்த தாத்தா வரலையாம்…


வர சொல்லுங்க அப்பான்னு செல்வி ஓடி போய் அவங்க அப்பா செல்வன்ட்ட சொன்னா…


செல்வன் வீட்டுக்குள்ள வந்து அவங்க அப்பா வேலுகிட்ட,


"என்ன அப்பா ..என்ன ஆச்சு..எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாம்ன்னு தானே சொன்னோம்…  நீங்க ஏன் வரல சொல்லறீங்க…"


"தோணலை டா ..  நீங்க போயிட்டு வாங்க" ன்னு சொல்லிட்டு இருந்தார்..


அப்போ அங்க வந்த செல்வி அம்மா ராசாத்தி…


"மாமா என்னாச்சு?  வாங்க...  உங்களைய தனியா எல்லாம் விட்டு போக முடியாது…"


"உங்களுக்கு என்ன சிரமம்…"


"நாம வேன்ல தான் போறோம் தேவையானப்ப நிப்பாட்டிக்கலாம்...  ஒண்ணும் கவலையில்ல.."


"அதுக்கு இல்லமா..  நீங்க சந்தோசமா போயிட்டு வாங்க.   நான் வீட்டில் இருந்துகிறேன்…"


"வாங்க மாமா..  தனியா உங்களை மட்டும் இங்க விட்டுட்டு போய் எங்களாலும் நிம்மதியா இருக்க முடியாது…"


"ம்ம்ம்ம்...  சரி மா... வரேன்…"

 எல்லாரும் போறது கோவிலுக்கு குல தெய்வ பூஜை..


முன்னாடி எல்லாம் நான்தான்  முதலில் கிளம்புவேன்….


அதுவும் காவேரி கரையில் உள்ள எங்க அம்பாளை  பார்க்கணும்னா கசக்குமா என்ன ….


அந்த இடமும்... கோவிலும் அவ்ளோ அழகு.   அதைப்பத்தி பேச ஆரம்பித்தால் அவ்ளோதான்…


நாள் முழுக்க கோவில் பெருமையை பேசிட்டே இருப்பேன்...

சின்ன வயசு நினைப்பு எல்லாம் அங்க போனா தானாவே கூடவரும்..

 ஆனா இப்போ உடல் உபாதை வீட்டில் இருந்தால் போதும்ன்னு தோணுது….


என்ன பண்ண?  வயசாகுதே...


இருப்பினும் பசங்களுக்காகன்னு கிளம்பியாச்சு…

 கோவிலுக்கு போய் பொங்க வச்சு சாமி கும்பிட்டு..  எல்லாருக்கும் ஒரு மன நிறைவு..


அம்பாளின் தரிசனம்..  எப்பவும் அமைதி தரும் அல்லவா…

 திரும்ப ஊருக்கு கிளம்ப ஆளுக்கு ஒரு வேலை பார்க்குறாங்க...


அப்போ நான் அங்க ஓடும் ஆத்தை பார்த்து உட்கார்ந்துட்டேன்…..


பேத்தி வந்து "தாத்தா என்னாச்சு?" னா….

"இல்ல மா பாரேன் இந்த ஆத்தை… எத போட்டாலும் எடுத்துக்கிட்டு….. எந்த சலனமும் இல்லாம ஓடுது…"

"நம்ம வாழ்கை போல…"


"தாத்தா! அப்போ நாமும் இந்த ஆறு போல எது நடந்தாலும் சலனம் இல்லாம போகனுமா…"

"அப்படி இல்லமா செல்லம்..


எங்களை போல வயசாகும் போது அது சரி தான் ...எல்லாத்தையும் ஏத்துகிட்டு சலனம் இல்லாம போகணும்…

ஆனா நீங்க சின்ன புள்ளைங்க  எல்லாம்..இந்த ஆத்துலேந்து நாம எப்படி வளைந்து கொடுத்து வாழணும்னு கத்துக்கணும்ம் டா.."


"அப்படியா தாத்தா.."


"ஆமா டா...தங்கம்…

ஆறு பாரு எல்லா இடத்திலேயும் சமமா ஓடுது...மேடு பள்ளம் பாக்கலை…


நல்லவங்க கெட்டவங்க பாக்கலை…

பாசக்காரன் மோசக்காரன் பாக்கலை…

அனைவரையும் சமம்மா பார்த்து…

விட்டு கொடுத்து ஓடுது…

அப்படி நீங்க இருக்கணும் டா…


எப்பவும் நிலையா..  நல்லவங்களா.."


"என்ன தாத்தா ...  உங்களுக்கு மட்டும் சலனம் இல்லாம ன்னு சொன்னீங்க… எங்களுக்கு வேற சொல்லறீங்க…"


"அப்படி தான் டா... காலம் மாற மாற எல்லாம் மாறுது…  நீங்க நல்லவங்களா வாழ பழகிட்டா வாழ்க்கையில் ஒரு நிம்மதி கூடவே வரும்..."

 "சரி தாத்தா… நீங்க சொல்ற மாதரி யே இருக்கேன்" ன்னு சொல்லி செல்வி தாத்தாவை பார்த்து சிரித்தாள்…


அந்த நிமிஷம் தாத்தாவுக்கும் மனதில் ஒரு நிம்மதி...


திரும்பி அவர் ஆத்தை பார்க்கும் போது வழக்கம் போல் அவள் எந்த சலனமும் இல்லாமல்…


ஓடி கொண்டிருந்தாள்…


நம் வாழ்க்கை போல்...



எங்கள் ப்ளாக் ல் கேட்டு வாங்கிப் போடும் கதைக்காக போன வருடம் அனுப்பிய கதை  ஒரு சேமிப்பாக இங்கும் .


அன்புடன்
அனுபிரேம் 



9 comments:

  1. ஆறு தன் போக்கில் போவது போல நம் வாழ்க்கையும் .
    எந்த சலனமும் இல்லாமல் ஓடிக் கொண்டு இருப்பது போல
    அதன் போக்கிலேயெ நம் வாழ்க்கையும் போக வேண்டும்.
    அருமை.

    ReplyDelete
  2. நதியின் ஓட்டத்தைப் போல அழகான கதை...

    தாத்தாவின் அறிவுரை அருமை...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  3. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  4. அனு சூப்பர் அனு. அங்கும் வாசித்து மீண்டும் இங்கும். ஆற்றினைப் போல அமைதியாகப் போகும் கதை!

    வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    ReplyDelete
  5. ஒரு வாழ்க்கைதத்துவத்தை கதை மூலம் அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  6. பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. காலம் மாற மாற எல்லாம் மாறுது… நீங்க நல்லவங்களா வாழ பழகிட்டா வாழ்க்கையில் ஒரு நிம்மதி கூடவே வரும்..."

    அருமை
    உண்மை

    ReplyDelete
  8. நல்ல கதை. பாராட்டுகள்...

    ReplyDelete