22 December 2022

தொண்டரடிப்பொடியாழ்வார்

 தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை





தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும்  செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே..!










பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

விப்ரநாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள்.

 திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.






மேம் பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிக உணர்ந்து,*
ஆம் பரிசு அறிந்துகொண்டு*  ஐம்புலன் அகத்து அடக்கி,*
காம்புஅறத் தலைசிரைத்து உன்*  கடைத்தலை இருந்து வாழும்*
சோம்பரை உகத்தி போலும்*  சூழ் புனல் அரங்கத்தானே!   38

909 

   
அடிமையில் குடிமை இல்லா*  அயல் சதுப்பேதி மாரில்,*
குடிமையில் கடைமை பட்ட*  குக்கரில் பிறப்பரேலும்,*
முடியினில் துளபம் வைத்தாய்!*  மொய்கழற்கு  அன்பு செய்யும்,*
அடியரை உகத்தி போலும்*  அரங்க மா நகருளானே! 39

910

  
திருமறுமார்வ! நின்னைச்*  சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்தர் ஆகில்*  மானிலத்து உயிர்கள்  எல்லாம்,*
வெருவு உறக்  கொன்று சுட்டிட்டு *  ஈட்டிய வினையரேலும்,*
அருவினைப் பயன துய்யார்*  அரங்க மா நகருளானே! 40

911 

    
வானுளார்  அறியல் ஆகா*  வானவா! என்பர் ஆகில்,*
தேனுலாம்  துளப மாலைச்*  சென்னியாய்! என்பர் ஆகில்,*
ஊனம் ஆயினகள் செய்யும்*  ஊனகாரகர்களேலும்,*
போனகம் செய்த சேடம்*  தருவரேல், புனிதம் அன்றே? 41

912









பழுது இலா ஒழுகல்  ஆற்றுப்*  பல சதுப்பேதிமார்கள்,*
இழிகுலத்தவர்களேலும்*  எம் அடியார்கள் ஆகில்,*
தொழுமின் நீர், கொடுமின், கொள்மின்!*  என்று  நின்னோடும் ஒக்க,*
வழிபட அருளினாய் போல் *  மதிள் திருவரங்கத்தானே! 42

913

    
அமர ஓர் அங்கம் ஆறும் *  வேதம் ஓர் நான்கும் ஓதித்,*
தமர்களில் தலைவராய*  சாதி அந்தணர்களேலும்,*
நுமர்களைப் பழிப்பர் ஆகில்* நொடிப்பது ஓர் அளவில்,*  ஆங்கே-
அவர்கள் தாம் புலையர் போலும்*  அரங்க மா நகருளானே! 43

914

 

பெண்உலாம் சடையினானும்*  பிரமனும் உன்னைக் காண்பான்,*
எண் இலா ஊழி ஊழி*  தவம் செய்தார் வெள்கி நிற்ப,*
விண்உளார் வியப்ப வந்து*  ஆனைக்கு அன்று அருளை ஈந்த-
கண்ணறா,*  உன்னை என்னோ*  களைகணாக் கருதுமாறே!(2) 44

915

     

வள எழும் தவள மாட*  மதுரைமா நகரம்  தன்னுள்,*
கவள மால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*
துவளத் தொண்டுஆய தொல்சீர்த்*  தொண்டரடிப்பொடிசொல்,*
இளைய புன் கவிதையேலும்*  எம்பிரார்கு இனியவாறே!(2) 45

916












ஓம் நமோ நாராயணாய நமக!!
தொண்டரடிப்பொடியாழ்வார்  திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்🌼🌼🌼

No comments:

Post a Comment