26 December 2022

11. திருப்பாவை - கற்றுக் கறவை

  பதினோறாம் பாசுரம் - இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். 





கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

      செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்

குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!

      புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்

      முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ

      எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய்


இளமை மாறாத பசுக்களின் பல கூட்டங்களையும் கறப்பவர்களாய், 

எதிர்ப்பவர்களுடைய பலம் அழியும்படி அவர்களிடத்துக்கே போய் போர் புரிபவர்களாய் குற்றமற்றவர்களான இடையர்களுடைய குலத்தில் பிறந்த பொற்கொடியைப் போன்றவளே! 

புற்றில் இருக்கும் பாம்பின் படம் போலே விரிந்திருக்கும் இடை ப்ரதேசத்தை உடையவளாய், தன் நிலத்திலே இருக்கும் மயில் போன்றவளே! வெளியே புறப்பட்டு வா. 

உனக்கு உறவினர்களான தோழிகள் எல்லோரும் வந்து உன் மாளிகையின் முற்றத்திலே 

புகுந்து நீல மேக வண்ணனான கண்ணன் எம்பெருமானுடைய திருநாமங்களைப் பாடியும் எங்கள் அன்புக்குப் பாத்திரமான நீ அசையாமலும் பேசாமலும் உறங்குவது எதற்காகவவோ?



மார்கழி மாதம்  பதினோறாம் நாள்  - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் கம்சவதம் திருக்கோலத்தில் ....











ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

1 comment:

  1. ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம்..

    ஓம் ஹரி ஓம்..

    ReplyDelete