23 December 2022

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி ...

 இன்று  ஹனுமத் ஜெயந்தி.... மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில்  ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 


நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் ஹனுமத் ஜெயந்தி விழா....





அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்



அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்,

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி ,

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று ,

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு ,

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்,

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்... 


( பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு தேவன் (காற்று) பெற்ற அனுமான். 
பஞ்சபூதங்களில் ஒன்றான கடலை (நீர்) தாவி , 
பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் (வானம்) ஏகி அதாவது பறந்து,
பஞ்சபூதங்களில் ஒன்றான (பூமி) அதாவது பூமாதேவியின் மகளான சீதாபிராட்டியை அயலார் நாடான இலங்கையில் கண்டு , அந்த இலங்கைக்கு 
பஞ்சபூதங்களில் ஒன்றான தீ யை (நெருப்பு) வைத்த அனுமான் 
நமக்கு நன்மை அளித்து காப்பான் .)



நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பு  அலங்காரத்தில் 






நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர்  தங்க  கவச அலங்காரத்தில் 












இன்று  1,00,008 வடை மாலை அலங்காரத்தில் ஸ்ரீஆஞ்சநேயர்  .... 




அசாத்ய சாதக ஸ்வாமிந் |

அசாத்யம் தவகிம்வத |

ராம தூத க்ருபாசிந்தோ |

மத் கார்யம் சாதய ப்ரபோ|


ஜெய்  ஸ்ரீராம் ...

ஜெய்  ஸ்ரீராம் ...

ஜெய்  ஸ்ரீராம் ...

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருவடிகளே சரணம் ...



அன்புடன், 
அனுபிரேம்  🌱🌱🌱

No comments:

Post a Comment