19 December 2022

4. திருப்பாவை - ஆழி மழைக் கண்ணா

  நான்காம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை  மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.




ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்

    ஆழியுள் புக்கு முகந்து,கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

    பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

    மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்


கடல்போலே ஆழமான தன்மையை உடைய மழைக்குத் தலைவனான வருணனே! நீ சிறிதும் மறைக்கக்கூடாது.

 கடலில் புகுந்து அங்குள்ள நீரை எடுத்துக்கொண்டு இடி இடித்துக்கொண்டு, வானத்தில் ஏறி, காலம் முதலான எல்லாப் பதார்த்தங்களுக்கும் தலைவனான எம்பெருமானின் திருமேனிபோலே உடம்பு கறுத்து, 

பெருமையையும் அழகிய தோள்களையும் உடையவனும் 

திருநாபீகமலத்தை உடையவனுமான எம்பெருமானின் திருக்கையிலே இருக்கும் திருவாழியைப் போலே மின்னி, 

மற்றொரு கையில் இருக்கும் திருச்சங்கைப் போலே நிலைநின்று முழங்கி, 

கால தாமதம் செய்யாமல் ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லாலே ஏற்பட்ட அம்பு மழைபோல், 

இவ்வுலகில் உள்ளவர்கள் உஜ்ஜீவிக்கும்படியும், 

நோன்பை அனுஷ்டிக்கும் நாங்களும் ஸந்தோஷத்துடன் மார்கழி நீராடும்படியாகவும், 

மழையைப் பெய்வாயாக.


மார்கழி மாதம் நான்காம் நாள் - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் கோபிகைகள் மழை வேண்டுதல் திருக்கோலம்.












ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....



அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺

2 comments:

  1. திருப்பாசுரமும் கண் கொள்ளாக் காட்சிகளும் அழகு.. அருமை.


    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவும் அருமை. இன்றைய திருப்பாவையின் நான்காம் நாள் பாசுரமும், அருமையான அதன் விளக்கமும் தெரிந்து கொண்டேன். ஸ்ரீ ரங்கநாதரையும், அவர் அருளில் திளைத்திருக்கும் ஸ்ரீ ஆண்டாள் தேவியையும் பணிந்து பற்றி துதிகள் பல செய்து கொண்டேன். அழகான படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete