அனைவருக்கும் வணக்கம் ...
பச்சைப் பயறு தோசை செய்வதற்கு முன் பச்சைப் பயறு பற்றி .....
பச்சைப் பயறு தோசை செய்வதற்கு முன் பச்சைப் பயறு பற்றி .....
பயிறு வகைகளில் மிக முக்கியமான பயிர் பச்சைப் பயிர் ...... பச்சைப் பயிறு புரோட்டீன், ஃபைபர் (fibre ) ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது. இந்த பச்சைப்பயிறானது உடல் சூட்டை தணிக்கிறது, மேலும் சருமத்திற்கு இயற்கையான பாதுகாப்பை அளிக்கிறது.
பச்சைப் பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
அடிக்கடி பச்சைப் பயிரை உணவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படுவதுடன், கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.
பச்சைப் பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.
தகவல்கள் இணையத்திலிருந்து
வாங்க பச்சை பயறு தோசை செய்ய போகலாம் ....
தேவையானவை .....
உடைத்த பச்சைப் பயறு - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 3 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை ...
மேலே உள்ள பொருட்களை 3 மணி நேரம் ஊரவைத்து ....
பின் அரைக்க வேண்டும் ....
அந்த மாவை உப்பு சேர்த்து மெலிதாக ஊற்றி எடுத்தால் ...பச்சைப் பயறு தோசை தயார் ..
அன்புடன்
அனுபிரேம்
பச்சைப்பயிறு தோசை மிக நன்றாக இருக்கிறது! செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்!
ReplyDeleteசெய்து பார்த்து விட்டீர்களா ...
Deleteவருகைக்கு மிகவும் நன்றி அம்மா ..
பயனுள்ள தகவல் எனக்கு செய்து கொடுத்தால் திங்க மட்டுமே தெரியும்.
ReplyDeleteஅடடா ...
Deleteபச்சைப் பயிறு தோசை சாப்பிடத் தூண்டுகிறது
ReplyDeleteநன்றி சகோதரியாரே
நன்றி ஐயா வருகைக்கும் கருத்திற்கும் ...
Deleteதோசை நல்லா இருக்கு அனு..நான் பூண்டு சேர்க்காமல் பச்சைக்கொத்துமல்லி இலை சேர்த்து அரைப்பேன். உங்க தோசை நல்லா சாஃப்ட்டா தெரியுது..!!
ReplyDelete
Deleteஆமாம் ..ரொம்ப soft ..
நானும் சில நேரம் வெறும் கறி வேப்பிலை ,பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செய்வது உண்டு ...
அது தனி சுவை
இதே அளவிலும் செய்வதுண்டு அனு. பச்சைப்பயறு அதிகமாகப் போட்டு அரிசு சும்மா பேருக்குப் போட்டும் செய்வதுண்டு. அரிசி அரை அளவு போட்டும் செய்வதுண்டு...பெசரெட் இல்லையா ஆந்திராவில்...
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி. அனு உங்கள் புகைப்படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. எனது கேமரா பழுதடைந்துவிட்டது. இல்லை என்றால் சுட்டுத் தள்ளுவேன். ஆனால் அது சாதாரண கேமராதான். நல்ல ஒன்று பார்க்க வேண்டும் நேரம் வரவில்லை போலும்
கீதா
ஆம் ஆந்திராவில் பெசரெட்...
Deleteஎனக்கு அது அவ்வளவாக நன்றாக வரவில்லை ...அதனால் அடை போல் செய்தேன் ....இது நன்றாக அமைந்துவிட்டது ....
இங்கும் கேமரா பழுது ...
படங்கள் எல்லாம் tab இல் எடுத்தது ... இங்கும் படங்களை எடுத்து தள்ளுவது உண்டு ...
புதிதாக செய்து படம் எடுக்கும் போது ...அவருக்கு சந்தேகமே வருவது உண்டும் நான் சாப்பிட செய்கிறேனா இல்லை படத்திற்காகவா என்று ...
இபொழுது எல்லாம் அவரே முதலில் படம் எடுக்கலையா என்று தான் கேட்பதே ....
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி ..
பூண்டு சேர்க்காமலும் செய்வதுண்டு...
ReplyDeleteகீதா
சில நேரத்தில்
Deleteஇதற்கு தொட்டுக்கொள்ள என்ன வைக்கலாம்? சொன்னீங்கன்னா ட்ரை பண்ணிருவேன்.
ReplyDeleteதேங்காய் சட்னி ....நல்ல காம்பினேஷன்
ReplyDelete..
இதை புளிக்க வைக்க வேண்டுமா??
ReplyDeleteதேவையில்லை ங்க...மாவை அரைத்த உடனே செய்யலாம்..
Delete