04 February 2016

தினை அடை

  அனைவருக்கும் வணக்கம் ...

தினை அடை செய்வதற்கு முன் தினையை  பற்றி .....

கி.மு. 2700 களிலேயே  சீனாவிலும்  பின்னர் சுவிட்சர்லாந்து   போன்ற   நாடுகளுக்கும் பரவியதாகவும்,    பின்னர்   இந்தியா,   ஜப்பான்,   தென் அமெரிக்கா,   வட அமெரிக்கா   போன்ற இடங்களில்   பயிரிடப்படுகின்றன.  இந்தியாவில் மட்டும்   ஆந்திரா,  குஜராத்,  தமிழ்நாடு, மகாராஷ்டிரா   மற்றும்   மைசூர்   போன்ற இடங்களில்  தினை  உணவு  தானியமாக பயிரிடப்படுகிறது.


அமெரிக்கா, மத்திய  ஐரோப்பாவில்  தீவனப் பயிராகவும்,  வளர்க்கின்றனர்.   இது  வறட்சியை  தாங்கும்  பயிர்.  இதனை  ஆண்டு  முழுவதும் பயிரிடலாம் ....



தினையின் பயன்கள்......

சிறு  தானிய  வகைகளுள்   தினையும் ஒன்று. இனிப்புச்  சுவை  கொண்டது.


உடலை  வலுவாக்கும்,  சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு.  இதற்கு  மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.


 பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.


100 கிராம் தினையில் உள்ள சத்துக்கள்


கலோரி - 331
நீர்ச்சத்து - 11.2 கிராம்
புரதச் சத்து - 12.3 கிராம்
கொழுப்புச் சத்து - 4.3 கிராம்
தாது - 3.3 கிராம்
நார்ச்சத்து - 8 கிராம்
கார்போஹைட்ரேட் - 60.9 கிராம்
பாஸ்பரஸ் - 290 மிகி
இரும்பு - 12.9 மிகி
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%

புரதம் ...


தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும்.

இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.


சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.


கொழுப்புச் சத்து....


தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.



கனிமச் சத்துக்கள்...

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை, கோதுமை, ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.



தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.


உடல் பலம் பெற....

நம் முன்னோர்கள் உணவுகளான கேழ்வரகு, கம்பு, வரகு, திணை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் மிகுந்த திடமாக இருந்தது. தினையில் உடலுக்கு தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதனால் திணை அரசியை சாதமாகவோ அல்லது லேசாக வறுத்து அரைத்து மாவாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல திடகாத்திரமான உடலை பெறலாம்.


வாதம் குறைய..


வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் நிலையம் அதனதன் நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியமாகும். இதன் நிலையில் எது மிகுந்தாலும் உடல் பாதிக்கப்படும். உடலில் வாதம் மிகுவதை போக்க திணை மாவு சிறந்த உணவாகும். இது வாயுவைப் போக்கி தச வாயுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் குணம் கொண்டது.

(செய்திகள்  அனைத்தும் இணையத்தில் இருந்து ....)

வாங்க தினை  அடை சாப்பிட போகலாம் ....


தேவையானவை .....

தினை அரிசி     - 2 ட 
க .பருப்பு             -1/2 ட 
து பருப்பு             -1/2 ட 
வர மிளகாய்     -  8
சோம்பு                --சிறிது 
பூண்டு                - 4 பல் 
உப்பு                    -  தே. அளவு 


செய்முறை ...

மேலே உள்ள பொருட்களை 3 மணி நேரம் ஊரவைத்து ....பின் அரைக்க வேண்டும் .... அந்த மாவை உப்பு சேர்த்து  மெலிதாக ஊற்றி எடுத்தால் ...தினை அடை தயார் ...


திணை 






அன்புடன்

அனுபிரேம்



5 comments:

  1. செய்வதுண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி அனு...

    கீதா

    ReplyDelete
  2. அனு,

    இப்போது எங்களுக்கும் சிறு தானியங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. நானும் இந்த அடையை சீக்கிரமே செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. சத்தான அடை.கூடவே அதன் பயன்கள் அருமை.நன்றி.

    ReplyDelete
  4. இவ்வளவு சத்தானது என்று தெரிந்தாலே நம் மக்கள் இதைச் சாப்பிட மாட்டார்களே! படம் சுவை நரம்பைத் தூண்டி இழுக்கிறது!

    ReplyDelete
  5. அருமையான ஆரோக்கியமான தினை அடை.

    ReplyDelete