ஸ்ரீ பேயாழ்வார் அவதார திருநட்சித்திரம் இன்று ... ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
பேயாழ்வார் வாழி திருநாமம்!
திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மறுக்கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே
நெருங்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே
பிறந்த ஊர் - மயிலாப்பூர்
பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை - வியாழன்
எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் -100
சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.
திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்
*வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,
*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற
திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.
பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை - வியாழன்
எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் -100
சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.
திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்
*வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,
*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற
திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.
மூன்றாம் திருவந்தாதி
2335
தாளால் சகடம்* உதைத்து பகடு உந்தி,*
கீளா மருது இடை போய், கேழல்ஆய்,* - மீளாது
மண் அகலம் கீண்டு* அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப்,*
பெண் அகலம் காதல் பெரிது. 54
2336
பெரிய வரை மார்பில்* பேர் ஆரம் பூண்டு,*
கரிய முகிலிடை மின் போல,* - தெரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே,* மற்று அவன் தன்
நீள் நெடுங் கண் காட்டும் நிறம். 55
2337
நிறம்வெளிது, செய்து* பசிது ,கரிது என்று,*
இறை உருவம் யாம் அறியோம், எண்ணில்,* - நிறைவுஉடைய
நாமங்கை தானும்* நலம் புகழ் வல்லளே,*
பூமங்கை கேள்வன் பொலிவு? 56
2338
பொலிந்து இருண்ட கார்வானில்* மின்னே போல் தோன்றி,*
மலிந்து திரு இருந்த மார்வன்,* - பொலிந்த
கருடன் மேல் கொண்ட* கரியான் கழலே,*
தெருள் தன் மேல் கண்டாய் தெளி. 57
2339
தெளிந்த சிலாதலத்தின்* மேல்இருந்த மந்தி,*
அளிந்த கடுவனையே நோக்கி,* - விளங்கிய
வெண் மதியம் தா என்னும்* வேங்கடமே,* மேல்ஒருநாள்
மண் மதியில்* கொண்டு உகந்தான் வாழ்வு. 58
2340
வாழும் வகைஅறிந்தேன்* மை போல் நெடு வரைவாய்த்,*
தாழும் அருவிபோல் தார்கிடப்ப,* - சூழும்
திருமா மணி வண்ணன்* செங் கண் மால்,* எங்கள்
பெருமான்* அடிசேரப் பெற்று. 59
2341
பெற்றம், பிணைமருதம்* பேய்முலை, மாச்சகடம்,*
முற்றக் காத்து, ஊடு போய், உண்டு, உதைத்து,* - கற்றுக்
குணிலை* விளங்கனிக்குக் கொண்டுஎறிந்தான்,* வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு. 60
உபதேசரத்தினமாலை
6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்
7
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து
முந்தைய பதிவுகள்
பேயாழ்வார் வைபவம்
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பேயாழ்வார்
பேயாழ்வார்- 19
பேயாழ்வார் -2020
பேயாழ்வார் வைபவம்
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பேயாழ்வார்
பேயாழ்வார்- 19
பேயாழ்வார் -2020
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!
ஓம் நமோ நாராயணாய நமக ....
அன்புடன்
அனுபிரேம் 💚💚💚💚
No comments:
Post a Comment