ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் நேற்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.
பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ் சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப் பூதலத்தில் வாழியே !
பிறந்த ஊர் - மகாபலிபுரம்
பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
கிழமை - புதன்
எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் - 100
சிறப்பு - குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.
எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால், பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும், பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.
அதாவது பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் பெரியவர்கள் வாக்கு.
பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
கிழமை - புதன்
எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் - 100
சிறப்பு - குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.
மஹாவிஷ்ணுவின் கதையான கெளமோதகியின் அம்சமான பூதத்தார் கடல்மல்லையில் (மாமல்லபுரம்), கடலுக்கருகில் உள்ள குளக் கரைத் தோட்டத்தில் ஒரு குருக்கத்தி (நீலோத்பவ) மலரில் அவதரித்தார்.
இவர் திருமாலையே எந்நேரமும் நினைத்து, அவர் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டே-வேறு எதிலும் நாட்டமில்லாமல் , ஒரு அசாதாரண மனிதராக இருந்ததால்,
பூதத்தாழ்வார் என்றழைக்கப்பட்டார்.
வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள்.
எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால், பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும், பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.
அதாவது பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் பெரியவர்கள் வாக்கு.
இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி
2235
வெற்பு என்று இரும் சோலை* வேங்கடம் என்று இவ் இரண்டும்*
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல்,* - நிற்பு என்று-
உளம் கோயில்* உள்ளம் வைத்து உள்ளினேன்,* வெள்ளத்து-
இளங் கோயில் கைவிடேல் என்று. 54
2236
என்றும் மறந்தறியேன்* ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,*
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்,* - வென்றி-
அடல் ஆழி கொண்ட* அறிவனே,* இன்பக்-
கடல் ஆழி நீ அருளிக் காண். 55
2237
காணக் கழி காதல்* கை மிக்குக் காட்டினால்,*
நாணப்படும் என்றால், நாணுமே?* - பேணி-
கரு மாலைப்* பொன் மேனி காட்டா முன், காட்டும்,*
திருமாலை நங்கள் திரு. 56
2238
திருமங்கை நின்றருளும்* தெய்வம் நா வாழ்த்தும்,*
கருமம் கடைப்பிடிமின் கண்டீர்,* - உரிமையால்-
ஏத்தினோம் பாதம்* இருந் தடக்கை எந்தை பேர்,*
நால் திசையும் கேட்டீரே நாம்? 57
2239
நாம் பெற்ற நன்மையும்* நா மங்கை நல் நெஞ்சத்து*
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து,* - வேம்பின்-
பொருள் நீர்மை ஆயினும்* பொன் ஆழி பாடு என்று,*
அருள் நீர்மை தந்த அருள். 58
2240
அருள் புரிந்த சிந்தை* அடியார்மேல் வைத்து,*
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது,* - இருள் திரிந்து-
நோக்கினேன் நோக்கி* நினைந்தேன் அது ஒண் கமலம்,*
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து. 59
2241
ஓர் உருவன் அல்லை* ஒளி உருவம் நின் உருவம்,*
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர்,* ஓர் உருவம்-
ஆதியாம் வண்ணம்* அறிந்தார் அவர் கண்டீர்,*
நீதியால் மண் காப்பார் நின்று. 60
உபதேசரத்தினமாலை
6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்
7
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!!
ஓம் நமோ நாராயணா..
அன்புடன்
அனுபிரேம்...
No comments:
Post a Comment