23 November 2024

76.நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே.

 (76) நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே.




 திருக்கண்ணபுரத்தில் பிறந்து திருவரங்கத்தில் குடியேறியவள் இந்தப் பெண் . அதனால் இவளைக் கணபுரத்தாள் என்று அழைத்தார்கள் ஊர் மக்கள். திருவரங்கத்தில் குருவின் மடத்துக்கு வாசல் தெளிப்பது, கோலம் பொடுவது என்று தன்னால் ஆன தொண்டுகளை செய்து குரு கூறும் ஆழ்வார் பாசுரங்களையும், நல் உபதேசங்களையும் கேட்பாள்.

ஒரு சமயம், ஸ்ரீ நம்பிள்ளை, ஒரு சிறிய பரிசில் படகில் காவிரி நதியைக் கடந்துக் கொண்டிருந்தார்.இந்தக் குழுவில் கணபுரத்தாளும் இருந்தாள்.  காவிரியில் நீர் வேகமாகச் சென்றுகொண்டு இருந்தது. 

இரவு நேரம், இருள் அதிகமாக இருந்தது. நதியில் வெள்ளம் வரும் அபாயம் தெரிந்தது.

வழியில் பரிசிலை ஓட்டுபவன் பதைபதைத்து “சாமி! பரிசில் செலுத்துவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது!” என்றான். அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது காவிரியின் வெள்ளம் அதிகமானது. பரிசில் திக்கு தெரியாமல் தத்தளித்தது.

பரிசல்காரன் “பரிசல் கனத்தால் நீரில் அமுங்கிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. நன்கு நீந்தத் தெரிந்தவர்கள் ஓரிருவர் பரிசிலை விட்டு இறங்கினால் பரிசில் தப்பிக்கும். இல்லை எல்லோரும் காவிரியில் மூழ்கி அமிழ்ந்து போவோம்!” என்று படபடப்புடன் எச்சரித்தான்.


யாரும் இறங்க முன்வரவில்லை. 

கடைசி எச்சரிக்கையாக “யாராவது ஒருவராவது நீரில் குதித்தால் நான் பரிசிலைப் பத்திரமாகக் கரை சேர்ப்பேன்!” என்றான் பரிசல்காரன்.

 அப்போது கணபுரத்தாள் பரிசில் காரனைப் பார்த்து “நீர் நூறு வயது நலமுடன் வாழ்வாய்! எங்கள் குருவைப் பத்திரமாகக் கரையில் சேர்த்துவிடு!” என்று கூறிவிட்டு காவிரியில் ’தொப்பென்று’ குதித்தாள்.

 எல்லோரும் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்கள்.


பரிசல் ஒரு வழியாகக் கரைசேர்ந்தது.

 கரை இறங்கிய குரு “நீரில் குதித்த அந்தப் பெண் என்ன ஆனால் ? பாவம் நமக்காக விழுந்தாளே! என்ன பாடுபடுகிறாளோ!” என்று புலம்பல் அந்தப் பெண்ணின் காதில் விழுந்தது.


“சாமி! நான் இங்கே இந்த மேட்டில் இருக்கிறேன்! கவலைப்படாதீர்கள்!” என்று குரல் கொடுத்தாள் கணபுரத்தாள். 

குருவிற்கு ஆச்சரியம் குரல் வந்த திசையைப் பார்த்தார். 

அங்கே அந்தப் பெண் கோரைப்புல் நிறைந்த மேட்டில் இருந்தாள். 

குரு அந்தப் பரிசில்காரனைக் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னார். பரிசில் ஓட்டியும் விரைந்து கணபுரத்தாளை பத்திரமாகக் கரை சேர்த்தான்.


குரு சந்தோஷமாக “ஒரு மேடு உனக்குக் கிடைக்க நீயும் பிழைத்தாய்! ஆச்சரியம்!” என்றார். 

அந்தப் பெண் குருவை வணங்கி “சாமி! அந்த ஆற்றில் மூழ்கிவிடாமல் அங்குக் கோரை மேடாய் இருந்தது நீங்கள் அன்றோ !” என்றாள்.

 ”குருவிட உனது திட நம்பிக்கை தான் உன்னைக் காத்தது!” என்று அவளை ஆசிர்வதித்தார்.


“சாமி! குருவே எல்லாமுமாக எண்ணி அவர் நலனுக்காகத் தன்னுயிரையும் துச்சமாக மதித்த கணபுரத்தாள் எங்கே நான் எங்கே ! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்!” என்றாள்.என்கிறாள் திருக்கோளூர் மங்கை.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே








திருவாய்மொழி இரண்டாம் பத்து 


 2 - 5 அந்தாமம்

இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க, மகிழ்தல் 


அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு,

அம் தாமம் வாழ் முடி சங்கு  ஆழி நூல் ஆரம் உள,

செந்தாமரைத்தடம் கண், செங்கனி வாய் செங்கமலம்,

செந்தாமரை அடிகள் செம் பொன் திரு உடம்பே. 5.1

3053


திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண்; கை கமலம்,

திரு இடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்,

ஒரு விடமும் எந்தை பெருமாற்கு அரனே; ஓ!,

ஒருவு இடம் ஒன்று இன்றி, என்னுள் கலந்தானுக்கே. 5.2

3054




77. திருவண்பரிசாரம்

ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ திருக்குறளப்பன் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment